ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி

Bookmark and Share

ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி

தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘கொக்கி’, சரத்குமார் நடித்த ‘வைத்தீஸ்வரன்’, அர்ஜூன் நடித்த ‘திருவண்ணாமலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. பிறகு கன்னட படத்தில் நடிக்க தொடங்கிய அவர், அங்கு முன்னணி நடிகையாக உள்ளார்.

இவர் கடந்த 2012-ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் சேர்ந்தார். பிறகு அதில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

2013-ம் ஆண்டு பி.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ரெய்ச்சூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி மீண்டும் ஜனதாதள கட்சியில் சேர்ந்தார்.

இவர் பெங்களூரு ஹைகிரவுண்ட் அசோகா ஓட்டலில் 2016-ம் ஆண்டு தங்கி உள்ளார். அதே நாளில் பா.ஜனதா பிரமுகரான அனில் மென்சினகாய் என்பவரும் அந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

ஓட்டல் வாடகை, சாப்பாட்டு செலவு ஆகியவற்றை இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வதாக கூறி இருந்தனர். ஆனால் ஓட்டல் வாடகையில் ரூ. 3 லட்சத்து 53 ஆயிரம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

ஓட்டல் நிர்வாகம் பலமுறை கூறியும், இருவரும் பணம் கட்ட மறுத்ததால் போலீசில் ஓட்டல் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து நடிகை பூஜாகாந்தியை அழைத்து போலீசார் விசாரித்தனர். முதற்கட்டமாக அவர் ரூ. 2 லட்சத்தை காவல் நிலையத்தில் செலுத்தி உள்ளார்.


Post your comment





Related News
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
சிரிக்க வைத்த காமெடி நடிகை காந்திமதி அழுது இறந்து போன அவலம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions