என்னை ஏத்துக்குங்க... ப்ளீஸ்! : பாகுபலி பட ஹீரோ பிரபாஸ் வேண்டுகோள்

Bookmark and Share

என்னை ஏத்துக்குங்க... ப்ளீஸ்! : பாகுபலி பட ஹீரோ பிரபாஸ் வேண்டுகோள்

நான் ஈ படம் மூலம், திரைப்பட உலகை அதிர வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர், 200 கோடி ரூபாய் செலவில், பாகுபலி என்ற, பிரம்மாண்டமான படத்தை உருவாக்கி உள்ளார். உலகம் முழுவதும், 4,000 தியேட்டர்களில், இந்த படம் இன்று வெளியாகிறது. 

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, இந்த படத்தின், ஹீரோ பிரபாஸ் அளித்த சிறப்பு பேட்டி: 

உங்களை பற்றி...?

நான் படித்து வளர்ந்தது சென்னையில்; செட்டிலானது ஐதராபாத்தில். நன்றாக தமிழ் பேசுவேன். 2002ல், ஈஸ்வர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானேன்.  நடிகை த்ரிஷாவுடன் நடித்த, வர்ஷம் படம், என்னை உச்ச நட்சத்திரமாக்கியது.

தொடர்ந்து, சக்கரம், சத்ரபதி, பவுர்ணமி, யோகி, முன்னா, பில்லா, டார்லிங், மிர்ச்சி என, பல தெலுங்கு படங்கள், ரசிகர்களிடம் பேசப்பட்டுள்ளன. இப்போது, ராஜமவுலி இயக்கத்தில், பாகுபலி படம், தமிழ், தெலுங்கில் வெளிவருகிறது. தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வரா என்ற பதற்றம் உள்ளது. தயவு செய்து, என் முதல் தமிழ் படத்திற்கு ஆதரவு கொடுங்கள்.

பாகுபலி படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன ?

இது, அப்பா, மகன் கதை. பாகுபலி, ஷிவுடு என்ற, இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். 100 ஆண்டுகளுக்கு முந்தைய கதை.முதலில், இயக்குனர் ராஜமவுலி பற்றி கூற வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன், அவரது இயக்கத்தில், சத்ரபதி என்ற படத்தில் நடித்தேன்; நல்ல பெயர் கிடைத்தது. ராஜமவுலி, வெளியில் மிக அமைதியான ஆள்; ஆனால், படப்பிடிப்பில், சிங்கம் போல இருப்பார்; அப்படி வேலை வாங்குவார்.என்னிடம் அவர், பாகுபலி கதையை கூறிய போது, மிகவும், திரில்லாக இருந்தது.

எப்போது இந்த படம் துவங்கும் என்ற ஆசை வர துவங்கியது. அவர், பெரிய தெலுங்கு பட இயக்குனர். அவர் எடுத்த அத்தனை படங்களும், ஹிட்! ஒரு வரலாற்று படத்தில், இந்திய சினிமாவில் பல பெருமைகள் பேசப் போகும் படத்தில், நான் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்.

பாகுபலி பட அனுபவம் எப்படி இருந்தது?

இந்த படத்தை, உடனே எடுத்து, உடனே முடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அடக்க முடியாது. படம் துவங்கவே, பல ஆண்டு; படத்தை முடிக்க, பல ஆண்டு; குறிப்பிட்ட நாட்கள், கால்ஷீட் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரே ஒரு பாடலுக்கான காட்சிகளை மட்டும், 22 நாட்கள் எடுத்தோம்.

என் கால்ஷீட் மட்டும், 300 நாட்கள்; அதில், 200 நாட்கள் சண்டைக் காட்சிகள். இதற்கு, மூன்று பயிற்சியாளர்கள் பணிபுரிந்தனர். இரண்டு ஆண்டுகளாக, நான் வேறு எந்த படமும் நடிக்கவில்லை. பாகுபலி படத்தில் எனக்கு, ஒரு புது அனுபவம் கிடைத்தது. என்னுடன், 2,000 மக்கள் நடித்துள்ளனர். 

குதிரை, யானை என்று பெரிய, பெரிய விலங்கு கூட்டங்கள், அருவிகள் மற்றும் மலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. 

தமன்னா, அனுஷ்கா என, இரண்டு கதாநாயகிகள் படத்தில் உள்ளனரே? 

இரண்டு பேருமே எனக்கு ஜோடி தான். ஒருவர் தேவசேனா (அனுஷ்கா); இன்னொருவர் அவந்திகா (தமன்னா). இரண்டு பேரும் எனக்கு பழக்கமானவர்கள் தான். அதனால் பிரச்னை ஒன்றும் வரவில்லை. இரண்டு பேரும், போட்டி போட்டு நடித்துள்ளனர்.  

இரண்டு நடிகையரில், யாருடன் நன்றாக ஒத்துழைத்து நடிக்க முடிந்தது?

எனக்கு தெரிந்து, அனுஷ்காவோட நடிச்சது, நன்றாக வந்துள்ளது. பத்து ஆண்டுகளாக அனுஷ்காவை தெரியும். அவருடன், இரண்டு படங்களில் நடித்துள்ளேன்.

தமன்னாவோடு, இது தான் முதல் படம்  பாகுபலி படம், ஹீரோவை மையமாக வைத்து எடுத்த படமா, ஹீரோயினுக்கு முக்கியத்துவமா?

நாசர், சத்யராஜ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் நான் உட்பட, ஏழு கதாபாத்திரங்களை பற்றி பேசும் படம். பெண்களுக்கு அதிக சக்தி உள்ளது என்பதை, இந்த படத்தைப் பார்க்கும்போது தெரியும். தமிழில், எந்த நடிகரோடு சேர்ந்து நடிக்க ஆசை? ரஜினியுடன், ஒரு படத்தில் நடிக்க வேண்டும். 

தமிழில், எந்த இயக்குனர் படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?

அது ஒரு பட்டியல் உள்ளது. நான் மணிரத்னம் ரசிகன். அவரிடம் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா, வருமா என, தெரியவில்லை. அப்படி வந்தால், கண்டிப்பாக அவர் படத்தில் நடிப்பேன்.

எப்போ உங்கள் திருமணம்?

என் திருமணம், ஏதோ ஒருநாள் கண்டிப்பா நடக்கும். இன்னும், பிளான் எதுவும் செய்யவில்லை. அதனால், திருமணம் பற்றி இப்போதைக்கு எதுவும் பேச முடியவில்லை.

ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?

ராஜமவுலி, இந்த படம் துவக்கிய போது, ஒன்றரை ஆண்டில் முடித்து விடுவார் என, நினைச்சேன். ஆனால், இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைவெளிக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நல்ல கதை அமையும்போது, தெலுங்கு மட்டும் அல்ல; இந்தி, தமிழ், கன்னடம் என்று எல்லா மொழிகளிலும் நடிப்பேன்.

ஒரே ஒரு பாடலுக்கான காட்சிகளை மட்டும், 22 நாட்கள் எடுத்தோம். என் கால்ஷீட் மட்டும், 300 நாட்கள்; அதில், 200 நாட்கள் சண்டைக் காட்சிகள். இதற்கு, மூன்று பயிற்சியாளர்கள் பணிபுரிந்தனர்.

 


Post your comment

Related News
ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions