இந்தாண்டு துவக்கமே நன்றாக அமைந்துள்ளது - புலன் விசாரணை-2 பற்றி பிரஷாந்த் பேட்டி!

Bookmark and Share

இந்தாண்டு துவக்கமே நன்றாக அமைந்துள்ளது - புலன் விசாரணை-2 பற்றி பிரஷாந்த் பேட்டி!

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் புலன் விசாரணை. இதன் இரண்டாம் பாகத்தை செல்வமணி சில ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கினார்.

ஆனால் அந்தப்படம் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இப்போது புலன் விசாரணை-2 ரிலீஸாகியுள்ளது. இப்படம் குறித்து நடிகர் பிரஷாந்த் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என இரண்டு சூப்பர் ஹிட் ஆக்ஷ்ன் படத்தை கொடுத்தவர் செல்வணி.

மூன்றாவதாக செம்பருத்தி எனும் அழகிய காதல் கதையை கொடுத்து, அதில் என்னை நடிக்க வைத்தார். ஆர்.கே.செல்வமணி ஒரு சகோதரர் போன்று என்னிடம் பழகுவார்.

ஒருநாள் நான், புலன் விசாரணை பார்ட்-2 பண்ண போகிறேன், அதில் நீங்கள் நடிக்கலாமா என செல்வமணி என்னிடம் கேட்டார். நானும் உடனே ஓ.கே., சொன்னேன். நாட்டில் நடக்கும் சில தீய விஷயங்களை மையமாக வைத்து இப்படத்தை செல்வமணி இயக்கியுள்ளார். இது ஒரு முழுநீள ஆக்ஷ்ன் படம்.

செல்வமணி படத்தில் எப்போதும் திரைக்கதை அருமையாக இருக்கும். மூன்று வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட படம் இது. இந்தப்படத்தில் நடித்தபோது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது.

டில்லியில் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள பாலம் அருகே இப்படத்தின் ஷூட்டிங்கை எடுத்தோம். புலன் விசாரணை படத்தில் நான் துணை கமிஷனராக நடிக்கிறேன்.

அப்போது அந்த இடத்தில் திடீரென பயங்கரமான டிராபிக் உருவாகிவிட்டது. இங்கு டிராபிக் அதிகமாவிட்டதை பார்த்து கமிஷனரே நேரில் வந்துவிட்டார் என மக்கள் கமண்ட் அடித்தனர்.

ஒருபக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்ல முடியவில்லை. அந்தளவுக்கு கடுமையான டிராபிக் இருந்தது. நான் ஒருபக்கம் கையை காட்டினேன். என்னை பார்த்ததும் நான் நிஜ கமிஷனர் என்று நம்பி அந்த பக்கம் இருந்தவர்கள் எல்லாம் ஒரு 10 அடி பின் சென்றுவிட்டனர்.

திடீரென நிஜமாகவே அங்கு போலீஸ் வர பின்னர் ஒருவழியாக எல்லாவற்றையும் சமாளித்து ஷூட்டிங்கை எடுத்து முடித்தோம். இப்போதும் அந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.

இந்தாண்டு துவக்கமே எனக்கு நன்றாக அமைந்துள்ளது. புலன் விசாரணையை தொடர்ந்து நான் நடித்துள்ள சாஹசம் உள்ளிட்ட மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 


Post your comment

Related News
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தனுஷ்!
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விசாரணை!
விசாரணை படத்துக்கு கிடைத்த மற்றொரு மரியாதை!
விசாரணை படத்துக்கு 3 தேசிய விருது
பல மொழிகளில் ரீமேக் ஆகும் விசாரணை!
இந்தியில் ரீமேக் ஆகிறது விசாரணை
பாகுபலியில் விசாரணை பட வில்லன்
விசாரணை மாதிரி ஒரு படத்தை பார்த்ததில்லை – டிவிட்டரில் புகழும் ரஜினி
நாளை முதல் திரையை அதிரவைக்க வரும் விசாரணை!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions