மீண்டும் டிவி சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை!

Bookmark and Share

மீண்டும் டிவி சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை!

பிரபல தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா பானர்ஜி மும்பையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பான 'பாலிகா வாது' தொலைகாட்சி தொடரில், ஆனந்தி கதாபாத்திரத்தில் அறிமுகமான பிரதியுஷா பானர்ஜி, குறுகிய காலத்தில் பலருக்கும் அபிமான நடிகையாக மாறியுள்ளார். இவர் மேலும் பல தொலைக்காட்சி தொடர்களில் தற்போது நடித்து வந்தார்.

இந்திய சின்னத்திரை நடிகைகளில் கவர்ச்சிகரமான பெண் நடிகைகள் பலர் உள்ளனர்.

அதில் துணிச்சலாக கவர்ச்சியாக நடிக்கும் டாப்10 இந்திய டிவி நடிகைகள் பட்டியலில் பிரதியுஷா இடம் பெற்றிருந்தார். பிரதியுஷாவின் பல சீரியல்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

வெள்ளிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய பிரதியுஷா பானர்ஜியை அவரது உறவினர்கள் மும்பையின் பிரபல மருத்துவமனையான கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதித்தார் என்றும் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டதாக வட இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரதியுஷா தற்கொலை

மும்பை காந்திவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் டி.வி. நடிகை பிரதியுஷா 24. இவர் 'பாலிகா வாது', 'ஹம் ஹெய்னா' 'ஆகட்' உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். இந்தநிலையில், பிரதியுஷா வெள்ளியன்று தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். திடீரென அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டுக் கொண்டார்.

பிரேத பரிசோதனை

தகவல் அறிந்த காந்திவிலி போலீசார் மருத்துவமனைக்கு சென்று பிரதியுஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரிவிலியில் உள்ள பகவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதியுஷாவின் தற்கொலைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

போலீஸ் விசாரணை

பாலிகா வாது சீரியலில் ஆனந்தியாக நடித்து அசத்திய பிரதியுஷா, பிக்பாஸ் 7 ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். பல டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான அவருக்கு 24 வயதாகிறது. டிப்ரஷன் எனப்படும் மன அழுத்தம் தான் அவர் இப்படி முடிவு தேடக் காரணம் என்கின்றனர்.

அவர் தனது தற்கொலை குறித்த கடிதத்தையும் விட்டு செல்லவில்லை. அவரது தற்கொலை குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆண் நண்பருடன் பிரச்சினையா?

பிரதியுஷாவும் அவருடைய ஆண் நண்பர் ராகுல் ராஜ் சிங்குக்கும் இடையே பிரச்சனை எனவும், அதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் இப்படி செய்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். ராகுலும் பிரதியுஷாவும் திருமணம் செய்ய இருந்தார்கள் என்ற தகவல் வெளிவந்த நிலையில் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது.

டிவி நடிகர்கள் அதிர்ச்சி

அழகான நடிகை பிரதியுஷா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தி சீரியல் நடிகை, நடிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

தொடரும் தற்கொலை

இது டிவி நடிக நடிகைகளுக்குப் போதாத காலம் போலத் தெரிகிறது. சமீபத்தில் தான் தமிழ்நாட்டில் டி.வி. நடிகர் சாய் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு ஒரு டி.வி. நடிகை. போன வாரம் ஒரு டிவி நடிகை தன் தற்கொலையை தானே ஸ்கைப்பில் லைவ் செய்தி அதிர்ச்சி அளித்தார். இந்த வியாதி இப்போது பாலிவுட்டில் தொற்றிக் கொண்டு விட்டது.

Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions