இந்த வருடம் 8 படங்கள் ரிலீஸ்! - ஜெட் வேகத்தில் பிருத்விராஜ்..!

Bookmark and Share

இந்த வருடம் 8 படங்கள் ரிலீஸ்! - ஜெட் வேகத்தில் பிருத்விராஜ்..!

இந்த ஐந்து மாதங்களில் பிருத்விராஜ் நடித்து ஒரே ஒரு படம் தான் ரிலீஸாகி இருக்கிறது. அதுவும் வெற்றிப்படமாகவும் ஆகியிருக்கிறது.. ஆனாலும் மீதமுள்ள ஏழு மாதங்களில் ஏழு படங்கள் ரிலீஸ் செய்ய பிருத்விராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதன் முன்னோட்டமாக இந்த மாதமே பிருத்விராஜ்-நிவின்பாலி நடித்துள்ள த்ரில்லர் படமான இவிடே முதலில் ரிலீஸாக இருக்கிறது. இதில் பிருத்விராஜ் அட்லாண்டா நாட்டு புலனாய்வு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அடுத்து தமிழ் ரசிகர்களுக்காக ஆர்யாவுடன் பிருத்விராஜ் இணைந்து நடித்துள்ள இரட்டைக்குழல் (மலையாளத்தில்  டபுள் பேரல் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

தொடர்ந்து பார்வதியுடன்  என்னு நிண்டே மொய்தீன் மற்றும் மியா ஜார்ஜ், பிஜூ மேனனுடன் இணைந்து நடித்துவரும்  அனார்கலி என்கிற ஆக்சன் த்ரில்லர் என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

இதுதவிர நீண்டநாள் தயாரிப்பாக உள்ள  பாவாட மற்றும் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அமர் அக்பர் ஆண்டனி ஆகிய படங்களையும் இந்த  வருடத்திலேயே ரிலீஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறாராம் பிருத்விராஜ்.


Post your comment





Related News
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ரஜினி பின் வாங்கவில்லை, தெளிவாக இருக்கிறார் - விவேக்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இரு நாயகிகள்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions