படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு

Bookmark and Share

படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு

ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனா, இச்சம்பவம் பற்றி டைரக்டர் லாலிடம் தகவல் தெரிவித்தார்.

அவர்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.  அவர் கொடுத்த தகவலின் பேரில்தான் பாவனா கடத்தலில் சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது  தெரியவந்தது. நேற்று முன்தினம் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளிகள் கைதான தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து பாவனா மெல்ல மெல்ல தேறி வந்தார். இந்நிலையில்  இன்று நடந்த படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். 

பிரித்விராஜ், நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் `ஆடம்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தின்   கதாநாயகியான பாவனா அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு படப்பிடிப்புக்கு வந்தார். பாவனா பாலியல் தொல்லை குறித்து  ஆரம்பம் முதலே தனது கண்டனங்களை தெரிவித்து வந்த நடிகர் பிரித்விராஜ், இன்று துவங்கிய புதிய படத்தின் படப்பிடிப்பில்  கலந்து கொண்ட பாவனாவின் தைரியத்தை பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து பிரித்விராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது,  

எனது வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு பிரச்சனைகளின் போது உறுதுணையாக இருந்தது எனது தைரியம் தான். அந்த தைரியத்தை  நான் எனது அம்மா மற்றும் மனைவிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். தண்டவாளத்தில் தடம் புரளும் ரயில் போல  சரிந்த  எனது வாழ்க்கையை நல்ல நிலைக்கு கொண்டு வர எனது தாயே எனக்கு துணையாக இருந்தார். அதே போல் சுமார் 40 மணிநேர  பிரசவ வலியுடன் அறுவைசிகிச்சை செய்து குழந்தை பெற்றெடுத்த எனது மனைவியின் தைரியத்தை ஒப்பிடுகையில், எனது  தைரியம் வெற்று என்றும் குறிப்பட்டார். 


அதேபோல் எனது தோழி பாவனா இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவரது தைரியத்திற்கு பாராட்டுக்கள். உங்கள்  வாழ்க்கையை நீங்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மற்றொரு தைரியமான பெண்  பாவனா என்றார். 
 ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மீதான வெறுப்பை போதிக்கும் ஒருசில படங்களில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்.  அந்த வகையான படங்களில் நடித்ததற்காக என்னை மன்னியுங்கள். பெண்களின் சுயமரியாதைக்கு இழுக்கு வரும் படங்களில்  இனி நடிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். 

எனவே இங்கு கூடியிருக்கும் அனைவரும் ஒருமுறை எழுந்து பாவனாவின் துணிச்சலுக்கு கைதட்டி பாராட்டுக்களை  தெரிவியுங்கள். அவரது துணிச்சல் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலையை சந்திப்பவர்களுக்கு எடுத்துகாட்டாக  இருக்கட்டும். அவர் மிகவும் துணிச்சல்காரி என்பதை நிரூத்துள்ளார். என் அன்புத்தோழியே உனது வாழ்நாள் ரசிகன் நான். 

இவ்வாறு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார். 

 


Post your comment

Related News
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
பாவானாவுக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடி முடிவு எடுத்த பிருத்விராஜ்
அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?
பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் 5 இயக்குனர்கள்..!
மீண்டும் லவ்வர் பாயாக மாறுகிறார் பிருத்விராஜ்..!
பிருத்விராஜ் - ஆர்யாவின் டபுள் பேரலுக்கு என்னதான் ஆச்சு?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions