குத்தாட்ட வாய்ப்பை திருப்பி அனுப்பிய ப்ரியாஆனந்த்!

Bookmark and Share

குத்தாட்ட வாய்ப்பை திருப்பி அனுப்பிய ப்ரியாஆனந்த்!

அரிமா நம்பி படத்திற்கு பிறகு மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்பதுதான் ப்ரியாஆனந்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை.

அதோடு, பின்னர் அவர் நாயகியாக நடித்து வெளியான இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என மூன்று படங்களுமே ப்ளாப் ஆகின. அதனால், ப்ரியாஆனந்தின் மேல்தட்டு ஹீரோ கனவு கலைந்து போனது.

இப்போது படம் கிடைத்தால் போதும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்த வகையில், தெகிடி அசோக்செல்வன் நடிக்கும் கூட்டத்தில் ஒருவன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அதோடு அரிமா நம்பி ஆனந்த் சங்கர் இயக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இந்த நேரத்தில், ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் ஏற்கனவே சிம்ரன், கயல் ஆனந்தி ஆகியோர் இருக்க, இப்போது ப்ரியாஆனந்தும் கமிட்டாகியிருக்கிறார்.

இந்த படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறாராம் ப்ரியாஆனந்த். ஆனால் அதைப்பார்த்து ஒரு புதுமுக இயக்குனர் தனது படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமாட ப்ரியாவை அழைத்தாராம்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து போன ப்ரியாஆனந்த், நான் கதாநாயகியாக நடிக்கும் படத்தில் குத்தாட்டம் ஆட தயாராக இருக்கிறேன். ஆனால் நான் நாயகியாக நடிக்காத படத்தில் அப்படி நடிக்கமாட்டேன் என்று உறுதியாக மறுத்து விட்டாராம்.


Post your comment





Related News
பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.!
காதலியை கரம்பிடித்த இருமுகன் இயக்குநர்!
கவர்ச்சி தேவதை டா.. யாஷிகா வெளியிட்ட போட்டோவை பார்த்து பார்த்து ரசிகர்கள் நெட்டிசன்கள் - புகைப்படத்துடன் இதோ.!
சிவகார்த்திகேயனின் ஹீரோ எப்போ வெளியாகுது தெரியுமா? உறுதியானத் தகவல்!
முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால்? - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.!
கணவர் இருக்கும் போதே மேலயும் கீழயும் எல்லாத்தையும் காட்டிய பிரியங்கா - வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions