கேள்வி கேட்டவர்களை தெறித்து ஓடவைத்த ப்ரியாஆனந்த்!

Bookmark and Share

கேள்வி கேட்டவர்களை தெறித்து ஓடவைத்த ப்ரியாஆனந்த்!

நடிகை ப்ரியாஆனந்த் சிலரைப்போன்று மூடியாக இல்லாமல் எப்போதும் கலகலப்பாகவே இருப்பார். அதன்காரணமாக தன்னை சுற்றியிருப்பவர்களையும் அவர் கலகலப்பாக்கி விடுவார். அதனால் படப்பிடிப்பு தளங்களில் சிலர் அவரை சுட்டிப்பெண் என்றே அழைக்கிறார்கள்.

அந்த அளவுக்கு எப்போதும் அவர் சுட்டித்தனம் செய்து கொண்டேயிருக்கிறார். மேலும், யாராவது அவரிடம் வாய் கொடுத்து விட்டால் அவர்களை விடாமல் வம்படியாக பிடித்துக்கொள்ளும் ப்ரியாஆனந்த், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் கொடுத்து ஆப் பண்ணி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது அவரை சூழ்ந்து கொண்ட சில இளவட்ட நடிகர்கள், லண்டனில் உங்களுக்கு ஒரு பாய் ப்ரண்ட் இருக்கிறாராமே? அவரை நீஙங்கள் டீப்பாக காதலித்து வருவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டார்களாம்.

விளைவு, அதைக்கேட்டு செம டென்சனாகி விட்டாராம் ப்ரியாஆனந்த். இந்த உலகத்தில் நடிகைகள் மட்டுமா காதலிக்கிறோம். எல்லோரும்தான் காதலிக்கிறாரக்ள். ஆனால் நாங்கள் காதலித்தால் மட்டுமே அதை கண் காது மூக்கு வைத்து கண்டபடி பேசுகிறீர்களே இது என்ன நியாயம் என்று பிடி பிடியென்று பிடித்துக்கொண்டாராம்.

அதோடு, நடிகைகள் காதலித்தால் அது தவறா? எதற்காக என்னிடம் அப்படியொரு கேள்வியை கேட்டீர்கள் என்றும் ஒரு வழி பண்ணி விட்டாராம். இதனால் அவரிடம் ஜாலிக்காக வாய் கொடுத்தவர்கள் விட்டால் போதுமென்று விழுந்தடித்து ஓடி விட்டார்களாம்.

ஆனால், தனக்கு லண்டனில் பாய்ப்ரண்ட் இருக்கிற விசயத்தை கடைசிவரை மறுக்கவே இல்லையாம் ப்ரியாஆனந்த். 


Post your comment

Related News
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions