நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் பீப்பிள் சாய்ஸ் விருது!

Bookmark and Share

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் பீப்பிள் சாய்ஸ் விருது!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். சுமார் 45 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்துள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்காவின் புகழ்மிக்க பீப்பிள் சாய்ஸ் விருதையும் கைப்பற்றியுள்ளார். 

எம்மா ராபர்ட்ஸ், ஜேமி லீ கர்ட்ஸ், லீ மிச்செல், மார்சியா கே ஹார்டன் போன்ற முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்குத்தள்ளி சிறந்த நடிகைக்கான பீப்பிள் சாய்ஸ் விருதுக்கு அவர் தேர்வு பெற்றுள்ளார்.

இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். பீப்பிள் சாய்ஸ் விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, “நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.

எனக்கு ஆதரவாக வாக்களித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் நான் ஒன்றுமில்லை” என்று டுவிட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions