அழகானவள் ஆனால் ரொம்ப மோசமானவள், ஏமாற வேண்டாம்: எச்சரிக்கும் பிரியங்கா சோப்ரா

Bookmark and Share

அழகானவள் ஆனால் ரொம்ப மோசமானவள், ஏமாற வேண்டாம்: எச்சரிக்கும் பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஹாலிவுட் படத்தின் மோஷன் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான குவான்டிகோ மூலம் வெளிநாடுகளில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.

அவர் ட்வெய்ன் ஜான்சனின் பேவாட்ச் படத்தில் வில்லியாக நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் பேவாட்ச் படத்தின் மோஷன் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.அவள் அழகை பார்த்து மயங்கிவிட வேண்டாம்.

அவள் ஆபத்தானவள் என மோஷன் போஸ்டர் ட்வீட்டில் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. நியூயார்க் நகரில் வீடு வாங்கியுள்ள அவர் அண்மையில் மும்பையில் ரூ.100 கோடிக்கு வீடு வாங்குவதாக செய்திகள் வெளியாகின. பிரியங்கா படங்கள் தவிர்த்து விளம்பரப் படங்களிலும் நடித்து கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions