பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்

Bookmark and Share

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்

இந்தி முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவும், ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனசும் காதலித்து வருகிறார்கள். இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் 2-ந்தேதி ராஜஸ்தானில் நடக்கிறது.

சமீபத்தில் நடந்த தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தற்போது பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடிக்கு நடக்க உள்ள திருமணம் தான் இந்திய சினிமாவில் முக்கிய செய்தியாக இருந்துவருகிறது.

ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ரா ஒரு இணைய தொடரில் நடித்து பிரபலமானவர். எனவே பிரியங்காவின் திருமணம் உலக அளவில் பிரபலமான திருமணமாகிவிட்டது. இந்தநிலையில் திருமண விழா ஏற்பாட்டில் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திருமணத்தை ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள உமைத் பவனில் நடத்துவது எனத் திட்டமிடப்பட்டதோடு, சங்கீத நிகழ்ச்சி மற்றும் மெகந்தி சடங்குகளை ஜோத்பூரில் உள்ள மேரான்கர் கோட்டையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் திடீர் மாற்றம் செய்யட்டுள்ளது.

உதய்பூரில் தேர்தல் நடக்க இருப்பதால் உமைத் பவன் மேரான்கர் கோட்டை இடையே திருமண ஊர்வலம் நடந்தால் தங்களால் போதிய அளவு பாதுகாப்பு வழங்க முடியாது எனக் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஒரே இடத்திலேயே இரண்டு நிகழ்ச்சிகளையும் நடத்த பிரியங்கா தரப்பு தற்போது முடிவெடுத்துள்ளது.

பிரியங்கா சோப்ரா விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். தமிழ் சினிமாவில் இருந்தும் சில பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 


Post your comment

Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions