அரசியல் புயலைக் கிளப்பும் புலிப்பட டிரைலர்

Bookmark and Share

அரசியல் புயலைக் கிளப்பும் புலிப்பட டிரைலர்

விஜய்யின் பாணி, பன்ச் டயலாக்குகள், சண்டைக் காட்சிகள், பிரம்மமாண்டமான அரங்குகள், ஸ்ரீதேவியின் தோற்றம் பற்றியெல்லாம் பேசி வருபவர்கள் புலி பட டிரைலரில்  உள்ள மற்றொரு விஷயத்தையும் கவனிக்கத் தவறவில்லை.

டிரைலரில்இடம் பெற்றுள்ள இரண்டு விதமான கேப்ஷன்களைத்தான் சிலர் அப்படியே அரசியல் பக்கம் திருப்பி விட்டு பேசிக் கொள்கிறார்கள். அவற்றை தலைவா பட வெளியீட்டுடனும் ஒப்பிட்டு பேசுகிறார்கள்.

தற்போது புதிதாக கிளம்பியுள்ள இந்தப் புயல் இன்னும் அதிகமாக மையம் கொள்ளாமல் இருந்தாலும், இந்த டிரைலரையும், அரசியலையும் முடிச்சுப் போட்டுப் பேசுவதை சிலர் நிறுத்தாமலிருக்கிறார்கள்.புலி டிரைலரில் ஆங்கிலத்தில் இரு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

 ‘ஒரு தேசத்தில் நடக்கும் இருள் ஆட்சி’, என்ற பொருளில்  ‘In a land ruled by darkness’ என்ற முதல் வாசகமும்,  ‘ஒரே ஒரு கதிர் மட்டுமே நம்பிக்கையாக உள்ளது’ என்ற பொருளில்  ‘There is only one ray of hope’ என்றஅடுத்த வாசகமும் வருகின்றன.

டிரைலரில், முதல் வாசகத்தையடுத்து, மகாராணி போல காட்சி தரும் ஸ்ரீதேவி என்ட்ரி கொடுக்கிறார். இரண்டாவது வாசகத்தையடுத்து, விஜய் என்ட்ரி கொடுக்கிறார்.

இந்த இரண்டையும் வைத்துத்தான் சிலர் சிண்டு முடிய ஆரம்பித்திருக்கிறார்கள்.சரித்திர, ஃபேன்டஸி படம் என்பதையும் மீறி புலி படத்தில் அரசியல் வாடை தூக்கலாகவே இருக்கலாம் என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு நிலவுகிறது.


Post your comment

Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions