புதிய ரூபத்தில் புலிக்கு ஆதரவு... சினிமா ரசிகனின் கருத்து

Bookmark and Share

புதிய ரூபத்தில் புலிக்கு ஆதரவு... சினிமா ரசிகனின் கருத்து

தலைவர் அவருடைய standard formula வெச்சு இன்னொரு பாஷாவோ, இன்னொரு படையப்பாவோ ஈஸியாக கொடுத்துருக்கலாம். ஆனால், அவரு இந்த நிலைமையில் எடுத்தது ஒரு புது முயற்சி கோச்சடையான்.

உங்க பாழா போன விமர்சனமும்   மீமிஸ்-ம் அந்த புது முயற்சியை கெடுத்து, மறுபடியும் அவரை அந்த பழைய கெனத்துக்குள்ளயே தள்ளி, நீங்களா எடுக்க வைத்த படம் தான் லிங்கா.இப்போது விஜய் நினைத்தால் இன்னொரு மகேஷ்பாபு படத்தை ரீமேக் பண்ணி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துட்டு, தன் கேரியரை இன்னும் ஸ்ட்ராங் பண்ணிருக்கலாம்.

ஏதோ ஒரு நல்ல விஷயம் அவரை பேண்டஸி படம் பண்ணனும்னு தூண்டியிருக்கு. இங்கிருக்கும் 10000+ டைரக்டர்களில் ஓரளவுக்கு நல்ல பேண்டஸி படம் பண்ணியிருக்கும் ஓரே டைரக்டர் சிம்புதேவன். அவர், ஒரு மாஸ் ஹீரோ நம்ம கிட்ட வந்து பேண்டஸி பண்ண சொல்வாருன்னு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஏனென்றால் நம்ம ஆடியன்ஸ் நம்ம ஹீரோக்களை அப்படி வேலிக்குள் கட்டி போட்டு வெச்சுருக்காங்க.

இந்த நிலைமையில் இந்த மனுஷன் தனக்கு தெரிஞ்ச அறிவை வைத்து ஒரு 3-6 மாதத்தில்ல் ஒரு கதைய ரெடிபண்ணி, படத்த ஒரு 6 மாதத்தில் ரிலீஸ்பண்ணி, இப்போ மீமிஸ் போடுறதில் அசுர கிரியேடிவிட்டி காட்டும் NETIZENS-யிடம் கண்ட கலாய் வாங்கி கொண்டு இருக்கிறார்கள். நீங்க வீட்டில் இருந்து MB கணக்கில் நெட்டிற்கு செலவு செய்து போடுகிற மீமிஸ் மாதிரி தான் அவங்க பல கோடி செலவு பண்ணி அவங்க கிரியேடிவிட்டி காட்டுறாங்க.

நம்ம எல்லாரும் நம்ம ஆபீஸில், கல்லூரியில், வீட்டில் நமக்கு கொடுத்த வேலைகளை அவ்ளோ கரெக்டா செய்றோமா என்ன?

எனக்கு கலாய்க்க முழு உரிமையும் இருக்குன்னு சொன்னீங்கனா, நீங்க போடுற ஒரு சின்ன குப்பைக்காக, ஒரு படைபாளியோட மனதை புண்படுத்துவதற்காக, அவங்களோட மானத்தை fb-ல் கப்பலேற்றுவதற்காக, ஒவ்வொரு படைப்பாளியும் உங்க வீட்டு முன்னாடி வந்து உங்க சுவற்றில் உங்களைப் பற்றி விமர்சனம் எழுத எல்லா உரிமையும் இருக்கு.

சினிமா மட்டும் எல்லாரும் விமர்சிக்கிற தொழிலாக இருக்கு. எத்தன IT கம்பெனி விமர்சகர்கள் அவங்க வேலைய சரியா செய்றோம். சரியாக வேலை செய்றவங்க எப்படி ஆபீஸில் இருந்து நாள் முழுவதும் மீமிஸ் போட முடியும்? நம்ம செய்யும் வேலையை மற்றவர்கள் ஒரு குறை சொன்னவுடன் நமக்கு எவ்வளவு கோவம் வருது. அதே மாதிரி தான் எல்லா சினிமாகாரனும்…

அவன் மனைவி, குழந்தை, குடும்த்த எல்லாம் விட்டு ஒரு நல்ல படமோ அல்லது மோசமான ஒரு படமோ எடுக்குறான். நல்ல படம் என்றால் அதை எல்லாரையும் பார்க்க சொல்லுங்க. கெட்ட படம் என்றால் அதை தூக்கி போட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்க. ஒரு நாளில் நாம கடந்து போகும் 99% சதவீதம் பேர் அவங்க வேலையை கரெக்டா செய்யாதவங்க தான். அவங்கள்ள கடந்து போற மாதிரி சும்மா கடந்து போங்க.

ஒரு சினிமா நன்றாக இருந்தாலும் உங்களை தான் எண்டர்டைன் பண்ணுது. நல்லா இல்லை என்றாலும் உங்களுக்கு ஒரு entertaining product ஆக (மீமிஸ் வழியா) தான் இருக்குது. netizens ஆகிய reviewers, மீமிஸ் கிரியேடர்ஸ் மற்றும் ஒரு படத்தில் லாஜிக் குறைகளை கண்டு பிடிப்பதையே பெரிய SHERLOCK HOLMES range-க்கு நினைத்து பெருமை கொண்டாடும் ஒரு சில நண்பர்களே..

நீங்க போடுகிற மீமிஸ் ஒரு செம்ம பவர்புல் மீடியம். உங்க கிரியேடிவிட்டி அதில் செம்ம மாஸ். 1947-ல் மீமிஸ் மற்றும் சமூக வலைதளம் இருந்திருந்தால் கண்டிப்பாக வெள்ளைக்காரன் ஓடியிருப்பான். அவ்ளோ பெரிய பவர்புல் மீடியம, நம்மளை entertain பண்ண ஆசைபடுகிற கலைஞர்களை காயப்படுத்தி அவங்களை மேலும் கீழேதள்ள பயன்படுத்துவதை கொஞ்சம் தவிர்க்கலாமே.

ஒரு கிரியேடரோட தப்ப இன்னொருத்தன் கிரியேடிவை கேலிகூத்து ஆக்குறது தான் கருத்து சுதந்திரமா?…. பழைய முயற்சியை மட்டும் செய்து வெற்றி பெறுவதற்கு, புது முயற்சியை தப்பாவாச்சும் செய்து தோற்பதே மேல்.


Post your comment

Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions