திகில் காட்சிகள் நிறந்த படம்தான்- புதுசா நான் பொறந்தேன்

Bookmark and Share

திகில் காட்சிகள் நிறந்த படம்தான்- புதுசா நான் பொறந்தேன்

சஹாரா எண்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் ஷாகீர் ஜேன் தயாரிக்கும் படம் “ புதுசா நான் பொறந்தேன் “ இந்த படத்தில் பியோன் கதாநாயகனாக  நடிக்கிறார்.

இவர் தென்காசி பட்டிணம் படத்தில் சின்ன வயது சரத்குமாராக நடித்தவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட நாற்பது  படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஒரு மலையாளப் படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

கதாநாயகியாக கல்யாணி நாயர்  நடிக்கிறார். மற்றும் கலாபவன் மணி, கராத்தே ராஜா, விஜயன், நரேஷ், சார்மிளா, பெஞ்சமின், மாபியா சசி  ஆகியோர் நடிக்கிறார்கள்.   

படத்திற்கு கதை,வசனம், திரைக்கதை அமைத்துள்ளார் பாலு படம் குறித்து இயக்குனர் மஜீத் அபு கூறுகையில்,“24மணி நேரத்தில் நடக்கும் திகில், காதல் மற்றும் ஆக்க்ஷன் போன்றவற்றை  உள்ளடக்கிய கதை. 

படு பயங்கரமான கொலைகாரனை பற்றிய செய்தி டி.வி. ஒன்றில்  ஒளிபரப்பாகிறது அதை பார்த்து நாயகி கல்யாணி. இவன் நிச்சயமாக என்னை இன்று கொன்று விடுவான் என்று அழுது புலம்புகிறார் !

அவசரமாக வெளியூர் புறப்பட்டுக் கொண்டிருந்த அவரது தந்தை அதை புரிந்து கொள்ளாமல், பக்கத்துக்கு வீட்டில் பியோனிடம் மகளை பார்த்து கொள்ளும்படி விட்டுவிட்டு செல்கிறார். கல்யாணி சொன்னபடி கொலைகாரன் அவளை கொலை செய்தானா..இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை. படப்பிடிப்பை முழுவதும் கொடைக்கானலில் இரவு நேரத்திலேயே நடத்தினோம்.                                                                           

திகில் படத்திற்கான முக்கிய அம்சமே நேர்த்தியான ஒளிப்பதிவு, பின்னணி இசை, பரபரப்பான திரைக்கதை இவை மூன்றும்  இப்படத்திற்கு கூடுதல் பலம்.  கலாபவன் மணி இந்த படத்தில் கண்டிப்பு மிக்க போலீஸ் அதிகாரியாக நடித்து படத்திற்கு வழு சேர்த்துள்ளார்.              

இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது” என்றார் இயக்குனர்.


Post your comment

Related News
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
“சின்ன படங்களை கொல்லாதீங்க” ; 'நான் இப்படித்தான்' விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்!
மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்!
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
மரகத நாணயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெய் ஆனந்த்
நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions