பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!

Bookmark and Share

பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!

கே ப்ரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் கிடந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் உங்க ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார்.

என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம்.

ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால்,  செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் என் ஃபேவரைட் பாடல் நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான் என்றார் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா குறும்படங்கள் இயக்கி வந்த நேரத்தில் ஒரு பெரிய கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. 21 வயதில்  ஈஸியாக வாய்ப்பு கிடைச்சிருச்சுனு நினைச்சேன்.

ஆனா அது நடக்கல, அப்போ தான் சினிமான்னா என்னனு தெரிந்து கொண்டேன். சில வருட போராட்டத்துக்கு பிறகு, யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிற படத்துக்கு காதல் கதை கேட்குறாங்கனு கேள்விப்பட்டேன்.

அந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பாளர்னு சொன்னாங்க. கரும்பு தின்ன கூலியா, இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்று நினைத்தேன் என்றார் இயக்குனர் இளன்.

படத்துலயும் நிறைய காதல் இருக்கு, படத்து மேலயும் நிறைய பேருக்கு காதல் இருக்கு. அதனால் தான் இந்த படம் இன்னைக்கு இந்தளவுக்கு வந்திருக்கு. இளன் என்னை விட 2 வயசு சின்னவர்.

இவ்வளவு இளமையான ஒரு படத்தை கொடுத்திருக்காரு. சின்ன வயசுல இருந்தே யுவன் பாடல்களை கேட்டு வளர்ந்தவன். இன்று அவர் தயாரிக்கும் முதல் படத்தில், அவர் இசையில் நாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றார் நாயகன் ஹரீஷ் கல்யாண்.

இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளைய இசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவை முதன்முறையாக சந்தித்தேன். அதன் பிறகு தர்மதுரை படத்திலும், அடுத்து கண்ணே கலைமானே படத்திலும் இணைந்து எங்கள் உறவு பலமானது.

அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில், நான் இயக்கும் படத்தை யுவன் தான் தயாரிக்க இருக்கிறார் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி. இளையராஜா சார் சாயல் இல்லாம யாரும் இசையமைப்பாளரா இருக்க முடியாது.

யுவனும் விதிவிலக்கல்ல. யுவன் ரொம்ப லேட்டா தான் மியூசிக் கம்போஸ் பண்ணுவார். யோகி படத்துக்கு பிறகு கம்போஸிங்கிற்கு ஃபிரான்ஸ் போனோம். ஒரு வேலையும் செய்யாமலே திரும்பி வந்தோம்.

ஆனால் மியூசிக் போட ஆரம்பிச்சுட்டார்னா 5 நிமிஷம் தான். என்னுடைய 5 படத்துக்கும் ஒரே டேக்ல  தான் பாட்டு போட்ருக்கார் யுவன். யுவன் இசையை விட்டு விலகினால் தான் உண்டு, இசை யுவனை விட்டு என்றைக்கும் விலகாது என்றார் இயக்குனர் அமீர்.

கற்றது தமிழ் படத்துக்கு இசையமைக்க யுவனை சந்திக்க நா.முத்துக்குமாரும் நானும் போனோம். அதன் பிறகு தங்க மீன்கள் சின்ன பட்ஜெட் படம், வேற இசையமைப்பாளர் போலாம்னு நினைச்சப்போ சம்பளம் பத்தி யாரு பேசுனா, அப்படினு சொல்லி இசையமைத்து கொடுத்தார்.

இன்று வரை பெரிய படம், சின்ன படம்னு பார்க்காமல் எல்லோரையும் சமமாக மதிப்பவர் யுவன் என்றார் இயக்குனர் ராம். யுவன் சின்ன வயசுல இருந்து நிறைய படங்களுக்கு, பாடல்களுக்கு இசையமைத்து விட்டார்.

அவர் கிட்ட புதுமையான விஷயங்கள் எதுவும் வராததால, கொஞ்சம் ஸ்லோ ஆகிட்டார்னு நினைக்கிறேன். நல்ல நல்ல படங்கள் அமையும்போது இந்தியாவின் மிகப்பெரிய இசையமைப்பாளரா இருப்பார் என்றார் இயக்குனர் அகமது.  

 


Post your comment

Related News
முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால்? - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.!
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions