தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா

Bookmark and Share

தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா

தனுஷ், ‘ராஞ்சனா’ இந்தி படம் மூலம் மும்பை படஉலகில் பிரபலமானார். அப்படம் ஹிட்டானதால் மீண்டும் இந்தியில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியது. தற்போது இரண்டாவதாக ‘ஷமிதாப்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார்.

இதில் தனுஷ் ஜோடியாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா நடிக்கிறார். அக்ஷரா நாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். பால்கி இப்படத்தை இயக்குகிறார்.
‘ஷமிதாப்’ படத்தில் முன்னணி இந்தி நடிகர்கள், நடிகைகள் பலர் நடிக்கின்றனர். அமிதாப்பச்சன் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தனுசும், அமிதாப்பச்சனும் நடித்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு உள்ளன.

தற்போது இந்த படத்தில் இந்திப்பட உலகின் முன்னாள் கனவுகன்னி ரேகாவும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன் தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை தனுஷ் இந்தியில் ரீமேக் செய்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகர்கள் தேர்வு நடக்கிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions