உலகத்திலேயே சோம்பேறிகள் யார் தெரியுமா? செல் போன் வைத்து எப்போதும் அதை நோண்டிக் கொண்டிருப்பவர்கள்தான் : ராதாரவி

Bookmark and Share

உலகத்திலேயே சோம்பேறிகள் யார் தெரியுமா? செல் போன் வைத்து எப்போதும் அதை நோண்டிக் கொண்டிருப்பவர்கள்தான் : ராதாரவி

எஸ். ஜே.தளபதிராஜ் இயக்கத்தில் மீடியா மாஸ்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பேரழகி' . இதில் புதுமுகங்கள் பலருடன்  ஒரு நடிகராக முக்கிய வேடத்தில் அறிமுகமாகியுள்ளார் இயக்குநர் பிரபு சாலமன்.

தவறான ஒரு மருத்துவ அறிக்கையால் புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கையின் கதை இது. தஞ்சைப் பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்திற்கு சாணக்யா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது "நான் வாட்ஸ்அப் எல்லாம் பார்ப்பது, படிப்பது இல்லை. நல்ல மாதிரி எழுதிவிட்டு கடைசியில் நாலுவரி சிலுமிஷமாக எழுதி விடுகிறார்கள்.

உலகத்திலேயே சோம்பேறிகள் யார் தெரியுமா? செல் போன் வைத்து எப்போதும் அதை நோண்டிக் கொண்டிருப்பவர்கள்தான். இதை நான் சொல்லவில்லை பில்கேட்ஸ் சொல்லியிருக்கிறார் இன்றைக்கு யாரும் செல்போனை கையில் வைத்துக் கொள்வதில்லை. அதற்கு ஒரு ஆள் வைத்துள்ளார்கள்.

இன்று தற்கொலை பெருக செல்போன், வாட்ஸ் அப் கள்தான் காரணம். இடைவிடாத படப்பிடிப்பில் இருந்த ஒரு நடிகன் மனைவிக்கு போன் செய்தான் . பதில் வந்தது என்ன தெரியுமா? இப்போ'து நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் 'என்று குரல் வந்தது.

அதிர்ச்சி அடைந்தவன்  அவசரப்பட்டு  தற்கொலை செய்து கொண்டு விட்டான் .இன்றைக்குப் பலரையும் தப்பாக யோசிக்க வைக்கிறது செல்போன். இதில் பிரபுசாலமன் நடித்திருக்கிறார். 

அவர் தப்பாக நினைக்கக் கூடாது,  அவரவர் வேலையை அவரவர் பார்க்கவேண்டும். நடித்து இயக்கும் போது  பல இயக்குநர்கள் கதையைக் கோட்டை விட்டு விடுகிறார்கள். ராம் கோபால் வர்மாவிடம் எப்போதும் இவ்வளவு பிஸியாக இருந்து கொண்டு   படம் எடுக்கிறீர்களே.

நீங்களாகவே ஒரு  அவுட்டோர் யூனிட் வாங்கி பயன்படுத்தலாமே என்ற போது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?அவரவர் வேலையை அவரவர் பார்க்கவேண்டும் என்றார்.

இங்கே ரித்திஷ் வந்திருக்கிறார். நல்ல மனிதர். மற்றவர்களுக்கு உதவுகிறவர். நடிகர் சங்கத் தேர்தலில் எங்களுக்குள் மோதல் இருந்தது. அதை எல்லாம் மறந்து விட்டோம்.இப்போது ஒன்றாகிவிட்டோம்.

ரித்திஷ் என்றும் என் தம்பிதான். நான் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை எனக்கு யார் மீதும் பகையில்லை . எனக்கு யார் மீதும் கோபமில்லை என்னைச் சீண்டினால்நான்  சும்மா இருக்க மாட்டேன்.

நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன்.எனக்கு 64 வயது ஆகிறது. நான் 62 வயதில் இறந்துவிடுவேன் என்று ஒரு ஜோதிடன் சொன்னான். ஆனால் நான்  உயிரோடு இருக்கிறேன். அவன் இறந்து விட்டான் எனக்கு ஜாதகம் பார்த்தவன் அவனுக்குப் பார்க்க மறந்து விட்டான் .யார் எப்படி என்று யார் சொல்ல முடியும்? நான் பிரபுசாலமன் நடத்திய பிரார்த்தனை கூட்டத்துக்குப் போனேன். அது ஒரு நல்ல விஷயம்.உடனே பிரபுசாலமன் மதமாற்றம் செய்கிறாரா என்று பேசுகிறார்கள்.

நானே மதம் பிடித்தவன் என்னை மாற்றி மதமாற்றம் செய்து விடுவார்களா? இங்கே சின்னத்திரையிலிருந்து நிறையப் பேர் வந்திருக்கிறார்கள்.  இந்தச் சின்னத்திரை, பெரியதிரைக்கு எவ்வளவோ உதவிகள் செய்து வருகிறது. சின்னத்திரை,என்பது கோவணம் மாதிரி, பெரியதிரை என்பது வேட்டி மாதிரி.

மானத்தைக் காப்பாற்ற கோவணம்தான் உதவுகிறது. சின்னத்திரை மட்டும் இல்லை என்றால் சினிமாவில் பத்தாயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டு இருப்பார்கள். சின்னத்திரை பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது. 

ஒருகாலத்தில் சின்னத்திரைக்கு எதிராக தயாரிப்பாளர்கள் பேசிய போது ஆதரவாக நான் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே சண்டை போட்டவன். இந்த தளபதி இரண்டு திரையிலும் வெற்றி பெற்றவர்.

'பேரழகி' வெற்றிபெற வாழ்த்துகிறேன். " என்றார். விழாவில் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் பிரபுசாலமன்,யார் கண்ணன்,விஸ்வநாத் .ரங்கநாதன்,  நித்தியானந்தம்,தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.எஸ்.சீனிவாசன், டி.ஜி .தியாகராஜன், உதயகுமார்,  ராஜா, சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் சிவன் சீனிவாசன், கவிஞர் சினேகன் படக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

 


Post your comment

Related News
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions