அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்

Bookmark and Share

அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `இமைக்க நொடிகள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதர்வா நடிப்பில் அடுத்ததாக `பூமராங்', `100' உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின்றன. 

இந்த நிலையில் அதர்வா `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் `குருதி ஆட்டம்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் நாயகி தேர்வு மும்முரமாக நடந்து வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார் ஒப்பந்தமாகி உள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசியதாவது,

ராதாரவி, ராதிகா எனது இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் நடிப்பது நிச்சயமாக படத்திற்கு மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமையும். இந்த கதையை எழுதியதில் இருந்தே இவர்களை தவிர வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை.

முதலில் இவர்கள் என் கதையை கேட்பார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது, ஆனால் நான் கதாபாத்திரத்தை எழுதியிருந்த விதம் அவர்களை கவர்ந்தது என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமான விஷயம். முழுமனதோடு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இந்த படத்தின் நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது, என்றார்.

ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மதுரைப் பின்னணியில் உள்ள கேங்க்ஸ்டர்களை பற்றிய ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகிறது.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions