அடுத்தது டப்பிங் கலைஞர்கள் சங்கம்... ராதாரவி பிடி எப்படி?

Bookmark and Share

அடுத்தது டப்பிங் கலைஞர்கள் சங்கம்... ராதாரவி பிடி எப்படி?

நடிகர் சங்க தேர்தலில் தாணு ஒருதலைப் பட்சமாக சரத்குமார் அணியை ஆதரித்தார் என்று கூறி தயாரிப்பாளர் சங்கம் பிளவுபட்டு நிற்கிறது.

ஞானவேல் ராஜா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தனி அணியாக நிற்கின்றனர். தாணு பதவி விலகியே தீரவேண்டும் என தயாரிப்பாளரும் திமுக எம்எல்ஏவுமான ஜெ அன்பழகன் வற்புறுத்தியுள்ளார்.

இன்னொரு பக்கம் பல ஆண்டுகளாக ராதாரவியின் பிடியில் இருக்கும் தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் யூனியனிலும் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இந்த சங்க உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் ஏற்கனவே தலைவராக இருக்கும் செல்வராஜுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சொந்தக் குரலில் பேசும் ஹீரோக்களாக இருந்தாலும் இந்தச் சங்கத்திலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என கடுமை காட்டி வருகிறார் ராதாரவி. நடிப்பு வேறு டப்பிங் வேறு. டப்பிங் பேசும் யாராக இருந்தாலும் இந்த யூனியனில் மெம்பராக இருக்க வேண்டும் என்பது ராதாரவியின் வாதம்.

இதனை கமல் ஹாஸன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நடிகர் சங்கத் தேர்தல் முடிந்ததும் அடுத்து டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதுதான் என்று விஷால் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இப்போது நடிகர் சங்கமே கைமாறிவிட்டதால், டப்பிப் கலைஞர்கள் சங்கத்தை இழக்காமல் இருக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை ராதாரவி ஆரம்பித்துவிட்டார்.


Post your comment





Related News
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு
மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் - மனிஷா கொய்ராலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions