பாகிஸ்தான் நடிகர்களுக்கு ராதிகா ஆப்தே ஆதரவு

Bookmark and Share

பாகிஸ்தான் நடிகர்களுக்கு ராதிகா ஆப்தே ஆதரவு

காஷ்மீர் மாநிலம் உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சல்மான்கான், கரண் ஜோகர், அனுராக் காஷ்யப் மற்றும் ஓம்புரி ஆகியோர் குரல் எழுப்பினர்.

பரபரப்பான இந்த சூழலில், நடிகை ராதிகா ஆப்தே நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், வெளியே வந்த அவரிடம் பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்திய படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ராதிகா ஆப்தே பதில் அளிக்கையில், “சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ‘வாட்ச்’ (கைக்கெடிகாரம்) நிறுவனங்கள் இந்தியாவில் வந்து கடைகளை திறக்கும் போது, பாகிஸ்தான் நடிகர்கள் இங்கு வந்து நடிக்கக்கூடாதா?. அந்நாட்டு நடிகர்கள் இங்கு வந்து நடிக்கட்டும். இது தான் என்னுடைய நிலைப்பாடு” என்று கூறினார்.
31 வயது நடிகை ராதிகா ஆப்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘கபாலி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஆவார். 


Post your comment





Related News
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions