ரஜினியுடன் மலேசியா பறக்கும் ராதிகா அப்தே

Bookmark and Share

ரஜினியுடன் மலேசியா பறக்கும் ராதிகா அப்தே

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் முடிவாகியுள்ளது. இந்த படத்தை ரஞ்சித் டைரக்டு செய்கிறார். இவர் அட்டகத்தி, மெட்ராஸ் படங்கள் எடுத்து பிரபலமானவர். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். இதர நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடக்கிறது. 

இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாபாத்திரத்துக்காக அவர் வெள்ளை தாடி வளர்த்து வருகிறார்.

ரஜினிகாந்துடன் மகள் கதாபாத்திரத்தில் முன்னணி இளம் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான நடிகை தேர்வும் நடக்கிறது. இந்த படத்துக்கான முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்குகிறது. 

டைரக்டர் ரஞ்சித் ஏற்கனவே மலேசியா சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்துவிட்டு வந்துள்ளார். அடுத்த மாதம் செப்டம்பர் 18-ந் தேதி படப்பிடிப்பை அங்கு தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இதற்காக ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சிலதினங்களுக்கு முன்னதாக மலேசியா புறப்பட தயாராகி வருகிறார்கள்.


Post your comment





Related News
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions