நாடகத்தில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே!

Bookmark and Share

நாடகத்தில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே!

பெங்காலி நடிகை ராதிகா ஆப்தே. இந்திப் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மராட்டிய மொழியில் இவர் நடித்த படத்தைத்தான் பிரகாஷ்ராஜ் தமிழில் தோனி என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

மராட்டிய படத்தில் நடித்த பாலியல் தொழிலாளி கேரக்டரை தமிழிலும் நடித்தார். அதன் பிறகு வெற்றிச் செல்வன் என்ற படத்தில் நடித்தார். நீண்ட நாள் கிடப்பில் கிடந்த படம் சென்ற ஆண்டுதான் வெளிவந்தது.

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையாவிட்டாலும் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்தியில் மட்டும் இவர் நடித்த 4 படங்கள் இந்த ஆண்டு வெளிவருகிறது. தெலுங்கில் ஒரு படமும், தமிழில் உலா என்ற படமும் வெளிவரவேண்டியது இருக்கிறது. இதற்கிடையில் பர்சாத் என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.

ராதிகா ஆப்தே, லண்டனைச் சேர்ந்த இசை கலைஞர் ஒருவரை காதலிக்கிறார். அவரை பார்க்க அடிக்கடி லண்டன் சென்று விடுவார். தற்போது தன் காதலர் இசை அமைக்கும் ஒரு  ஆங்கில நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

லண்டன் தியேட்டர்களில் நடக்கும் இந்த நாடகத்தில் இந்தியாவிலிருந்து லண்டன் சென்று வாழும் பெண்ணாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே, தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்து நடிகையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 13 நாடகங்களில் நடித்துள்ளார். அதனால் நாடகம் அவருக்கு புதிதில்லை.


Post your comment





Related News
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions