நடனத்தை 100 சதவீதம் சினிமாவில் வெளிப்படுத்துபவர் சிரஞ்சீவி: ராகவா லாரன்ஸ் புகழாரம்

Bookmark and Share

நடனத்தை 100 சதவீதம் சினிமாவில் வெளிப்படுத்துபவர் சிரஞ்சீவி: ராகவா லாரன்ஸ் புகழாரம்

‘புரூஸ்லீ தி பைட்டர்’. இப்படத்தை ஸ்ரீனு வைத்லா இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘புரூஸ்லி-2’ என்ற பெயரில் வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. 

இதில், இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீனு வைத்லா, நாயகி ராகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் கௌதம் மேனன், மோகன்ராஜா, சுரேஷ் கிருஷ்ணா, விஷ்ணுவர்தன், எடிட்டர் மோகன், ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஞானவேல்ராஜா, ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசும்போது, எனக்கு தெலுங்கில் நடன இயக்குனராக வாய்ப்பு கொடுத்தவர் சிரஞ்சீவி சார்தான். அவர் இல்லையென்றால், நான் இப்போது நம்பர் 1- டான்சராக ஆகியிருக்க முடியாது. ஒருமுறை சிரஞ்சீவி சார் நடித்துக் கொண்டிருந்த படத்துக்கு நான் டான்ஸ் பண்ணிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு ராம்சரண் வந்தார். 

அப்போது சிரஞ்சீவி சார் என்னிடம், ராம்சரணை ஹீரோவாக அறிமுகப்படுத்தப் போகிறேன். அவன் ஒழுங்காக டான்ஸ் எல்லாம் பண்ணுகிறானா? என்று சோதித்து பார் என்று சொன்னார். நானும் அவரிடம் சில ஸ்டெப்புகளை போடச் சொன்னேன். அவரும் நன்றாக ஆடினார். 

பின்னர், ராம்சரணின் அக்கா கல்யாணத்துக்கு ராம்சரணை ஆட வைக்கலாம் என்று முடிவு செய்தேன். சிரஞ்சீவி சாரிடம் சென்று அவரை ஆடவைக்கலாமா? என்று கேட்டேன். அவரும் ஓகே சொன்னார். பின்னர், ஒரு வாரமாக ராம்சரணுக்கு டான்ஸ் பயிற்சி கொடுத்தேன். அப்போது அடிக்கடி சிரஞ்சீவி சார் வந்து என்னிடம் ராம்சரண் எப்படி ஆடுகிறார் என்று அடிக்கடி கேட்பார். 

கல்யாணத்துக்கு ஒருநாள் முன்னாடி, திருமணத்திற்கு வந்த கூட்டத்தை பார்த்த சிரஞ்சீவி சார், இவ்வளவு பெரிய இடத்தில் ராம்சரண் ஒழுங்கா ஆடுவாரா? என்று கேட்டார். நானும் அவர் நல்லா ஆடுவார் சார்ன்னு ஒப்புதல் கொடுத்தேன். சரி, அப்படின்னா ராம்சரணுக்கு எத்தனை மார்க் கொடுப்பே என்று என்னிடம் கேட்டார். நான் 90 மார்க் கொடுப்பேன்னு சொன்னேன். 100 மார்க் கொடுக்கமாட்டியா? என்று கேட்டார். 

சினிமாவில் நிறைய பேர் டான்ஸ் பண்றாங்க. ஆனால், 100 சதவீதம் முழுமையாக டான்ஸ் ஆடுற ஒரே நடிகர் நீங்க மட்டும்தான் என்று அவரிடம் நான் சொன்னேன். ஒரு அப்பாவாக, ராம்சரண் எப்படி ஆடப்போகிறான் என்கிற பதட்டம் சிரஞ்சீவி சாருக்கு அன்று முழுவதும் இருந்தது. பின்னர் கல்யாணத்தில் ராம்சரண் டான்ஸ் ரொம்பவும் அழகாக இருந்தது.

அதைப் பார்த்ததும் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது டான்ஸ் மட்டுமில்லாமல், ஆக்ஷனிலும் ராம்சரண் முன்னேறியிருக்கிறார் என்கிற போது பெருமையாக இருக்கிறது என்றார்.


Post your comment





Related News
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions