கோவை சரளாவை காமெடி அம்மாவாக்கிய ராகவா லாரன்ஸ்!

Bookmark and Share

கோவை சரளாவை காமெடி அம்மாவாக்கிய ராகவா லாரன்ஸ்!

மனோரமா இடத்தை பிடிக்க முடிவு செய்திருந்த கோவை சரளா, கொம்பன் படத்திற்கு பிறகு அது நடக்கும் என்று எதிர்பார்த்தார். அந்த படத்தில் அவருக்கு கிடைத்திருந்த ஆவேசமான டயலாக்குகளும் அதற்கு வழி வகை செய்யும் என்றுதான் கோவை சரளாவும் நினைத்தார்.

அதனால் அடுத்தடுத்து செண்டிமென்ட் அம்மா வேடங்களில் நடிக்க சில டைரக்டர்களிடமும் கதை கேட்டு வந்தார். ஆனால், அந்த நேரம் பார்த்து ராகவா லாரன்சின் காஞ்சனா-2 படம் வெளியாகி, மீண்டும் கோவை சரளாவின் காமெடி பேசப்பட்டது.

விளைவு இப்போது அவரை புக் பண்ண செல்லும் எல்லா இயக்குனர்களுமே காமெடி கலந்த அம்மா வேடங்களுக்கு கோவை சரளாவை புக் பண்ணுகிறார்களாம்.

அதனால், மனோரமா இடத்தை பிடிக்க திட்டமிட்ட கோவை சரளா, தனது விருப்பத்தை விட இயக்குனர்களின் விருப்பம்தான் முக்கியம் என்று முடிவு செய்து மீண்டும் காமெடி அம்மாவாக மாறி விட்டார்.

அதனால், செண்டிமென்ட் அம்மா வேடங்களில் நடித்து வரும் சரண்யா, தனக்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்த்த கோவை சரளாவின் ரூட் காமெடியாகி விட்டதால், அம்மா வேடங்களில் அழுத்தமாக காலூன்றும் முயற்சியில் தற்போது தீவிரமடைந்திருக்கிறார்.


Post your comment





Related News
அந்தர் பல்டி அடித்த ராகவா லாரன்ஸ்; அப்போ மானம் தன்மானம் எல்லாம் பொய்யா?
மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்!
அன்னையர் தினத்தன்று அம்மாவுக்கான பாடலை வெளியிடும் ராகவா லாரன்ஸ்!
ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்
ராகவா லாரன்ஸின் மகளா இது?
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions