அந்தர் பல்டி அடித்த ராகவா லாரன்ஸ்; அப்போ மானம் தன்மானம் எல்லாம் பொய்யா?

Bookmark and Share

அந்தர் பல்டி அடித்த ராகவா லாரன்ஸ்; அப்போ மானம் தன்மானம் எல்லாம் பொய்யா?

தன்னுடைய ரசிகர்கள் இப்படத்தை இயக்கும்படி வற்புறுத்துவதால் இது தொடர்பான இறுதி முடிவை விரைவில் அறிவிப்பேன் எனவும் லாரன்ஸ் அந்தர்பல்டி அடித்துள்ளார்.
ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான். 2015ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காஞ்சனா முதல் பாகம் இந்தியில் லக்‌ஷ்மி பாம்ப் எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்றும், இதில் அக்ஷய் குமார் ஹீரோவாகவும் தோனி படத்தில் நடித்த கியாரா அத்வானி ஹீரோயினாகவும் நடித்து வருவதாகவும் நாம் கூறியிருந்தோம்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய வேளையிலேயே பஞ்சாயத்தில் சிக்கியது தன்னிடம் எந்த முன்னறிவிப்பும் சொல்லாமல் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அது தன்னை அதிர்ச்சி அடைய செய்தது லாரன்ஸ் குற்றம் சாட்டினார் மேலும் கருத்தும் அதன் காரணமாகவும் சுயமரியாதை காரணமாகவும் படத்தில் இருந்து விலகுவதாகவும் லாரன்ஸ் கூறினார் இந்த விவகாரம் வட இந்திய ஊடகங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படியான தருணத்தில் தற்போது லாரன்ஸ் மறுபடியும் ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில் காஞ்சனா விவகாரம் தொடர்பாக சுமுகமான தீர்வு எட்டுவதற்காக இந்தி தயாரிப்பு நிறுவனம் நேற்று தன்னை சென்னையில் வந்து சந்தித்ததாகவும் தொடர்ந்து தன்னுடைய ரசிகர்கள் இப்படத்தை இயக்கும்படி வற்புறுத்துவதால் இது தொடர்பான இறுதி முடிவை விரைவில் அறிவிப்பேன் எனவும் லாரன்ஸ் அந்தர்பல்டி அடித்துள்ளார்.


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
பிக் பாஸில் பங்கேற்கவில்லை - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?
தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் - பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!
விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions