முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் ஆதரவளிக்கவில்லை: ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் ஆதரவளிக்கவில்லை: ராகவா லாரன்ஸ்

தமிழக அரசியல் களம் ஒருவாரத்திற்கும் மேலாக சூடு பிடித்துள்ளது. அதிமுக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில், சினிமா கலைஞர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களான ராமராஜன், தியாகு, மனோபாலா ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். இப்படியாக அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.

மீடியாக்களிலும் இந்த செய்தி வெளிவந்தது. இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராகவா லாரன்ஸ் ஆதரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. ஆனால், ராகவா லாரன்ஸோ தான் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவரது இல்லத்திற்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் சமீபத்தில் முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியதை, அவருக்கு நான் ஆதரவு அளிக்க சென்றதாக சொல்லி ஒரு செய்தி பரவி வருகிறது.

ஆதரவு தெரிவிப்பதற்காக அவரை நான் 0சந்திக்கவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நன்றி தெரிவிக்கவே அவரை சந்தித்தேன். மற்றபடி, இந்த சந்திப்பு எந்த அரசியல் காரணங்களுக்காவும் நடைபெறவில்லை. நாங்கள் 1000 கிலோ கேக் வாங்கி ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 


Post your comment





Related News
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions