சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!

Bookmark and Share

சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!

பாகுபலியின் மூலம் வணிக ரீதியாக இந்திய சினிமாவுக்கான சந்தையை விரிவுப்படுத்தியது மட்டுமல்லாமல் பிரம்மாண்ட சினிமாவுக்கான புதுவரைமுறையை வகுத்தவர் ராஜமௌலி.

ஒவ்வொரு படத்திலும் தனக்கான எல்லையை விரித்துக்கொண்டே செல்லும் ராஜமௌலி, பாகுபலியில் அடைந்திருக்கும் உச்சம் பிரமிக்கத்தக்கது. ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கே சவால்விடும் VFX காட்சிகளை முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கியதன் மூலம் கூடுதலாக கவனம் பெற்றார் ராஜமௌலி. 

இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமாதான் என உலகில் பிறமொழி ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் தென்னக மொழியின் பெருமையாக உலகம் முழுக்க வசூல் வேட்டை நடத்தியது பாகுபலி.

அந்தவகையில் தென்னக மொழி படங்களுக்கான புகழை இந்திய அளவிலும் இந்திய மொழி படங்களுக்கான புகழை உலக அளவிலும் பரப்பியவர் ராஜமௌலி. இப்படி பல பெருமைகளை கொண்ட ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வருகிறார்.

இதன் பிறகு அவர் இயக்கும் படத்தில் யார் ஹீரோ என்பதுதான் தற்போதைய கேள்வி. இதற்கு தற்போது விடையும் கிடைத்துள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படத்தைதான் அடுத்து ராஜமௌலி இயக்கவுள்ளாராம். 


Post your comment





Related News
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions