முட்டாளாக மறந்து போனேன் - தன்னையே தாக்கிக் கொண்ட ராஜமௌலி

Bookmark and Share

முட்டாளாக மறந்து போனேன் - தன்னையே தாக்கிக் கொண்ட ராஜமௌலி

பாகுபலி படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன் திருப்பதியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பிரபாஸ் ரசிகர்கள் திரண்டிருந்த அந்த விழாவில் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குனர் ராஜமௌலி, நட்சத்திரங்கள் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், கிருஷ்ணம்ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசும் போது ராஜமௌலி சிலருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டிருக்கிறார். அதன் பின் அவர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் நன்றி சொல்லியிருக்கிறார். “திருப்பதியில் நடைபெற்ற மகிழ்ச்சிதரக் கூடிய அதிகமான சோர்வையும் தந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வீடு திரும்பினேன்.

ஆனால், பலருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். என்னுடைய தயாரிப்பாளர்கள் இந்த அளவிற்கு விசாலமான பார்வையை வைக்கவில்லையென்றால் இப்படி ஒரு படம் உருவாகியிருக்காது.

ஒளிப்பதிவாளர் செந்தில் இந்த நிமிடம் வரை இந்தப் படத்தின் மீதே அவருடைய பார்வையை வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் விஎப்எக்ஸ் சூப்பர்வைசரான ஸ்ரீனிவாஸ் மோகன் என்றுமே சோர்வடைந்ததில்லை. கடந்த 3 வருடங்களாக பாகுபலி படத்திற்காகவே அவருடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்.

ராகவேந்திர ராவை எப்படி மறந்தேன். என் மீது அதிக நம்பிக்கை வைத்தவரே அவர்தான். ஒரு முட்டாளைப் போல, இடத்திற்கு முதலில் அனுமதி வாங்கிக் கொடுத்து, எங்களுக்கு உதவி செய்த நபரைப் பற்றி எப்படி மறந்து போனேன். பாலகிருஷ்ணா அவர்களுக்கு என்னுடைய இதயத்திலிருந்து, படக் குழுவினர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கமர்ஷியல் திரைக்கதை என்றால் என் என்பதைக் கற்றுக் கொடுத்த இயக்குனர் கே.வி.ரெட்டிக்கும், விஎப்எக்ஸ் என்பதை இந்தியத் திரையுலகிற்கு கொண்டு வந்த ஷியாம் பிரசாத் அவர்களுக்கும், விஎப்எக்ஸ்-ஐ எப்படி கமர்ஷியலாகப் பயன்படுத்த வேண்டும் என்று காட்டிய இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கும் நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions