ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!

Bookmark and Share

ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!

ராஜாவுக்கு செக் படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான் என்று தான் எண்ண தோன்றுகிறது. சாய் ராஜ்குமார் இயக்கத்தில் Soman Pallatte Thomas Kokkatt தயாரிப்பில் சேரன், 

ஸ்ருதி டாங்கே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜாவுக்கு செக். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கும் போது சேரன் ஒரு போலீஸ் என்பதும் அவருக்கு அதிக நேரம் தூங்கும் ஒரு நோய் இருப்பதும் தெரிய வருகிறது. 

ஒரு கும்பல் ஸ்ருதி டாங்கே மற்றும் சில பெண்களை குறி வைத்து வருவது போலவும் அவர்களிடம் இருந்து தன்னுடைய தூக்க நோயையும் எதிர்த்து போராடி அந்த பெண்களை எப்படி மீட்கிறார் என்பது தான் கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. 

எனவே வழக்கம் போல் ஒரு போலீஸ் கதையை கொண்ட படமாகவே இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். வில்லனாக நடித்திருப்பவர்ளை பார்க்கும் போதெல்லாம் ஒரு வில்லன் ஃபீல் வரவில்லை. 

மொத்தத்தில் ட்ரைலர் ஒரு சீரியல் போன்ற உணர்வை தான் ஏற்படுத்துகிறது. தொடர் தோல்விகளை சந்தித்த சேரன் திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

அந்த படமும் கலவையான  சந்தித்து இருந்த நிலையில் இந்த படமாவது அவருக்கு கை கொடுக்குமா? இல்ல ராஜாவுக்கு செக் சேரனுக்கு செக்காக மாறி விடுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions