சட்டமன்ற தேர்தலில் முதல் ஆளாக வந்து ஓட்டுப் போட்ட ரஜினி - அஜித்

Bookmark and Share

சட்டமன்ற தேர்தலில் முதல் ஆளாக வந்து ஓட்டுப் போட்ட ரஜினி - அஜித்

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் அஜித் இன்று வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே முதல் ஆளாக வந்து சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது வாக்கை பதிவு செய்ய வந்திருந்தார். அஜித் வருகிறார் என்றதும் அவரது ரசிகர்கள் வாக்குப் பதிவு மையத்தின் முன் திரளாக திரண்டிருந்தனர்.

அஜித் வாக்கு பதிவு மையத்திற்கு வந்ததும் அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டனர். பின்னர், அஜித்தை போலீசார் பத்திரமாக வாக்குப் பதிவு மையத்திற்குள் அழைத்து வந்தனர். பின்னர், சிறிது நேர காத்திருப்புக்குப் பின் அஜித் தனது வாக்கை பதிவு செய்தார். அஜித்துக்கு முன்னதாக சிலர் வாக்கு பதிவு செய்ய காத்திருந்தனர். பின்னர்,

அஜித் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி ஷாலினி மற்றும் அவரது அம்மாவும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

அதேபோல், நடிகர் ரஜினிகாந்தும் காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார். வாக்கை பதிவு செய்ய வந்த ரஜினியை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். வாக்கை பதிவு செய்தபின் ரஜினி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

காலையிலேயே முன்னணி நடிகர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வந்து தங்களது வாக்கை பதிவு செய்து பலருக்கும் முன்னுதாரணமாக இருந்துள்ளனர். 


Post your comment





Related News
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்
பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் மோதல் - தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்
இதுகெல்லாம் சூப்பர் ஸ்டாரும் அஜித்தும் தான் காரணம் - சிம்பு பரபரப்பு பேச்சு.!
ரஜினி சாதனை முறியடிப்பு, விஜய் சாதனையை முறியடிப்பாரா அஜித்?
2.O-வில் ரஜினியை மிரட்டவரும் அஜித் வில்லன்!
ரஜினி, அஜித்தை பேட்டியெடுக்க வேண்டும் – பிரபல தொகுப்பாளினி விருப்பம்!
பிரபல நடிகருக்கு எதிராக போர்கொடி தூக்கிய அஜித் ரசிகர்கள்!
ரஜினிக்கும் அஜித்துக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions