ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்

Bookmark and Share

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்

`2.0' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பேட்ட' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகிறது.

`பேட்ட' படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கதையம்சம் கொண்டது. `முதல்வன்' பட பாணியில் முருகதாஸ் ஸ்டைலில் திரைக்கதை இருக்கும் என்கின்றனர். ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி அடுத்ததாக `சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வினோத் சொன்ன ஒரு கதை ரஜினிக்கு பிடித்துபோனதாகவும், அதன் திரைக்கதையை மேலும் நன்றாக செதுக்கும்படி அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் தனுசும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வினோத் தற்போது, அஜித்தை வைத்து `பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களையும் முடித்த பிறகு ரஜினி - வினோத் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் இயக்கும் இரு படங்களையும் முடித்த பிறகே ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா?
தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்!
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
தெய்வமகள் சீரியல் பிரபலத்திற்கு போன் செய்து அதிர்ச்சி கொடுத்த தல அஜித்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions