ரஜினிமுருகன் படப்பிடிப்பு முடிவடைந்தது...

Bookmark and Share

ரஜினிமுருகன் படப்பிடிப்பு முடிவடைந்தது...

காக்கி சட்டை படத்தைத் தொடர்ந்து அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநரான பொன்ராம் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.  

வருத்தப்படாத வாலிபர் சங்கம்  படத்தைப் போலவே சிவகார்த்திகேயனுக்கு இணையான காமெடி வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார் சூரி. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி, ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரஜினி முருகன்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சுமார் 40 கோடிக்கு வாங்கி உள்ளது.  

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ரஜினிமுருகன் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களாக மதுரையில் நடைபெற்றது. பாடல் காட்சி மற்றும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து ரஜினிமுருகன் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றுள்ளது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி ரஜினி முருகனின் ஃபர்ஸ்ட் லுக்கை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் விஜய் அவார்ட்ஸ் விழாவில் வெளியிடுகிறார்கள். அதோடு டி.இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களை ஜூன் 7ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ரஜினி முருகன் படம் ஜூலை 17ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது.

 


Post your comment





Related News
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ரஜினி பின் வாங்கவில்லை, தெளிவாக இருக்கிறார் - விவேக்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இரு நாயகிகள்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions