முதல் படத்திற்கே ஆப்பா… கொதித்தெழுந்த ரஜினிமுருகன் பட இயக்குநர்

Bookmark and Share

முதல் படத்திற்கே ஆப்பா… கொதித்தெழுந்த ரஜினிமுருகன் பட இயக்குநர்

அட்லீயின் உதவிஇயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ரஜினி முருகன். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகிறது. இதனால் படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. சென்சார் பணிகள் முடிந்தவுடன் ‘ரஜினி முருகன்’ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தனர். சென்சார் பணிகள் முடிந்தவுடன் செப்டம்பர் 17ம் தேதி படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியது.

ஆனால், தயாரிப்பாளர் இதற்கு முன்புவாங்கிய கடனை அடைத்தால் மட்டுமே இப்படத்தை வெளியிடும் சூழ்நிலை உருவாகியது. இதனால் செப்டம்பர்17ம் தேதி இப்படம் வெளியாகவில்லை.

‘ரஜினி முருகன்’ வெளியானால் மட்டுமே, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதால் இயக்குநர் பொன்ராம் தயாரிப்பு நிறுவனம் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.


Post your comment





Related News
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா – என்னன்னு நீங்களே பாருங்க!
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions