ரஜினி முருகன் கடைசி கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

Bookmark and Share

ரஜினி முருகன் கடைசி கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள 'ரஜினி முருகன்' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பமானது.

இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகும் முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கு உடல் நிலை சரியில்லாமல் சில வாரங்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள்.

அவர் முழுவதுமாக குணமடைந்து விட்டதால் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்கள். ஜுலை 17ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதால் இப்போது ஆரம்பமாகியுள்ள கடைசிக் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாக உள்ளன.

அதன் பின் முதல் பார்வை, டீசர் என ஒவ்வொன்றாக வெளியிட உள்ளார்கள். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் வசூல் சாதனை புரிந்த பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி  மீண்டும் இணைந்துள்ளதால் 'ரஜினி முருகன்' படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில்தான் படத்தை முதலில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் படத்தின் நாயகியின் தவிர்க்க முடியாத உடல்நிலை காரணத்தால்தான் படப்பிடிப்பு தள்ளிப் போனது.

எனவேதான், வெளியீடும் தள்ளிப் போய்விட்டது. இல்லையென்றால் கோடை விடுமுறையிலேயே ரஜினி முருகனை பார்த்து ரசித்திருக்கலாம். கீர்த்தி சுரேஷ் இந்தப் படம் தவிர 'இது என்ன மாயம், பாம்புச் சட்டை' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே மூன்று படங்களில் நடிக்கும் நாயகி என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்.

 


Post your comment





Related News
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா – என்னன்னு நீங்களே பாருங்க!
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions