பிரமாண்டத்தை நம்பாத ரஜினிகாந்த்!

Bookmark and Share

பிரமாண்டத்தை நம்பாத ரஜினிகாந்த்!

1975ல் கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி, அதையடுத்து அவரது இயக்கத்திலேயே மூன்று முடிச்சு படத்திலும் நடித்தார்.

பின்னர் 1977-ல் நடித்த புவனா ஒரு கேள்விக்குறி படம் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இத்தனைக்கும் அந்த படத்தில் சிவகுமார்தான் ஹீரோ.

சுமித்ரா ஹீரோயின். ஆனால் வில்லனாக நடித்த ரஜினிக்காக அந்த படம் ஓடியது. அதிலிருந்து சூடு பிடித்த ரஜினியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் செல்லத் தொடங்கியது.

ஆனால் அந்த காலட்டத்தில் எல்லாம் ரஜினி நடித்த படங்கள் பிரமாண்டம் இல்லாமல் கதையை முன்நிறுத்திதான் தயாரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், சமீபகாலமாக அவர் நடித்த சிவாஜி, எந்திரன், கோச்சடையான், லிங்கா போன்ற படங்கள் பிரமாண்டத்தை முன்வைத்தே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதன்பிறகு அவர் நடிக்கப்போகும் படங்களும் கண்டிப்பாக பிரமாண்டமாகவே இருக்கும்.

ஆனால், ரஜினியோ இப்போதும் பிரமாண்டத்தை நம்பாமல் கதையைத்தான் அதிகமாக நம்புகிறாராம்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள ஒரு செய்தியில், பிரமாண்டம் என்பது படத்தின் வெற்றியை ஒருபோதும் தீர்மானிக்காது. படத்தின் முதுகெலும்பு வெற்றி எல்லாமே கதைதான்.

பாரதிராஜா இயக்கிய கிழக்குச்சீமையிலே படத்தில் எந்த பிரமாண்டமும் இல்லை. ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு காரணம் கதை மட்டுமே.

ஆக, பிரமாண்டத்துக்காக எந்த படமும் ஓடாது. கதைக்காக மட்டுமே ஓடும் என்கிறாராம் ரஜினி.

 


Post your comment





Related News
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions