ரஜினிக்கு எழுதுவது போல் விஜய்க்கு பாட்டெழுதிய வைரமுத்து!

Bookmark and Share

ரஜினிக்கு எழுதுவது போல் விஜய்க்கு பாட்டெழுதிய வைரமுத்து!

தனது வாரிசுகளான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரை களத்தில் இறங்கி விட்டுவிட்டார் வைரமுத்து. அதில் மதன் கார்க்கி பல ஹிட் பாடல்களை கொடுத்திருப்பதோடு, பாகுபலி உள்பட சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

இப்படி வாரிசுகள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோதும், வைரமுத்துவின் பாட்டுப்பயணம் எந்தவித தொய்வும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், விஜய் படங்களுக்கு பெரும்பாலும் பாடல்கள் எழுதாத அவர், இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதோடு விஷாலின் பாயும்புலி படத்திற்கும் வைரமுத்துதான் பாடல் எழுதியிருக்கிறார்.

ஆக, ரஜினி போன்ற நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் ஓப்பனிங் பாடல், தத்துவப்பாடல் என்று எழுதியுள்ள வைரமுத்து, இந்த புலி படத்தில் விஜய்க்காக ஒரு புரட்சிகரமான பாடலை எழுதியிருக்கிறார்.

இந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக, பாட்ஷாவில் ரஜினிக்காக எழுதிய ஆட்டோக்காரன், ரா ரா ராமைய்யா பாடல்களைப்போன்று எளிதில் புரியும் வகையிலான வார்த்தைகளை கோர்த்து எழுதியிருப்பதாக சொல்கிறார் வைரமுத்து. 


Post your comment





Related News
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions