புதிய படத்தில் ரஜினியின் ஜோடி யார்?

Bookmark and Share

புதிய படத்தில் ரஜினியின் ஜோடி யார்?

லிங்கா படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு ரஜினியெல்லாம் இனிமேல் கதாநாயகனாக நடிப்பதை விட்டு விட்டு அமிதாப்பச்சனை மாதிரி வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதுதான் நல்லது என்று கோலிவுட்டில் பலர் ஆரூடம் சொல்லி வந்தார்கள்.

அந்த நேரத்தில், ரஜினியும் லிங்கா பிரச்சினையில் இருந்ததால் அவரும் ரூட்டை மாற்றக்கூடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ, மெட்ராஸ் டைரக்டர் ரஞ்சித் சொன்ன கதையில் லயித்துப்போனவர், இந்த படம் தனக்கு மட்டுமன்றி தனது ரசிகர்களுக்கும் வித்தியாசமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஹீரோ கோதாவில் இறங்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

மேலும். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோது கதாநாயகி யார் என்பதை குறிப்பிடவில்லை என்பதால், அந்த நடிகையா? இந்த நடிகையா? என்று ஆளாலுக்கு பேசத் தொடங்கி விட்டார்கள்.

அந்த வகையில், இந்த முறை ரஜினியுடன் நடிக்கப்போவது நயன்தாராவாக இருக்கும் என்று முன்பே செய்திகள் வெளியானது. ஆனபோதும், தற்போது அவர் பெயருடன் சேர்த்து அனுஷ்கா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளின் பெயரையும் வாயில் போட்டு மெல்லத் தொடங்கியிருக்கிறது கோடம்பாக்கம்.


Post your comment





Related News
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions