ரஜினியுடன் டூயட்: பிரபல நடிகை மறுப்பு

Bookmark and Share

ரஜினியுடன் டூயட்: பிரபல நடிகை மறுப்பு

நடிகர் ரஜினிகாந்த், என் தந்தையைப் போன்றவர். அவருடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஆனால், அவருடன், டூயட் பாடுவது குறித்து நினைத்து கூட பார்க்க முடியவில்லை, என, பிரியாணி படத்தில் நடித்த, மாண்டி தாக்கர் கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான, பிரியாணி படத்தில், மாயா என்ற கேரக்டரில் நடித்தவர் மாண்டி தாக்கர், 29. இவர், இந்தி மற்றும் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் அளித்துள்ள பேட்டி:எனக்கு நல்ல ஞாபக சக்தி உள்ளது. அதனால் தான், தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடிக்கும்போது, வசனங்களை மனப்பாடம் செய்து, அசத்தலாக பேசி நடிக்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்துடன்,64, நடிக்க வேண்டுமென அனைத்து நடிகைகளும் விரும்புவதை போல், நானும் விரும்புகிறேன். ஆனால், அவருக்கு ஜோடியாக, அவரை காதலிக்கும் வேடத்தில் நடிக்க மாட்டேன். ரஜினி, அமிதாப் போன்ற நடிகர்களை என் தந்தையைப் போல் நினைக்கிறேன். இதனால், அவர்களுடன் டூயட் பாடுவது பொருத்தமாக இருக்காது. இவ்வாறு, அவர் கூறினார்.

தர்மசங்கடம்:நடிகர் ரஜினி, லிங்கா படத்தில், பிரபல இந்தி நடிகரும், பா.ஜ., - எம்.பி.,யுமான, சத்ருகன் சின்காவின் மகள் சோனாக் ஷிசின்காவுடன், 28, இணைந்து நடித்தார். சோனாக்ஷியுடன் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் நடிக்கும்போது, தர்மசங்கடமாக இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.


Post your comment





Related News
தர்பார் ஹிட்டாகுமா? ஆகாதா? - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.!
ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்!
மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி!
நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்!
தர்பாரில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை – யார் தெரியுமா?
இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்?
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions