தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினார் ரஜினிகாந்த்

Bookmark and Share

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினார் ரஜினிகாந்த்

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்தார். 

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், அவர்களின் குடும்பதினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதில் முதற்கட்டமாக 9 பேருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மக்களின் அமைதியான போராட்டத்தின் போது, சமூக விரோதிகளால் வன்முறை வெடித்தது. இதில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஜெயலலிதா அதனை சரியாக செய்திருந்தார். ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கக் கூடாது. 

தமிழகம் போராட்டக் களமாக மாறிருக்கிறது. தூத்துக்குடியில் நடந்த அசம்பாவிதத்துக்கு உளவுத்துறையின் தவறே காரணம் என்றார். 


Post your comment





Related News
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions