தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!

Bookmark and Share

தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.நேற்று இதன் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதன்பிறகு யோகி பாபுவும் இப்படத்தில் இணைந்தார்.இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இவர்களுடன் நடிகை நிவேதா தாமஸும் இதன் படப்பிடிப்பில் அண்மையில் இணைந்துள்ளாராம்.

பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் இப்படத்தில் ரஜினியின் மகளாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரஜினி, நயன்தாரா மற்றும் யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படக்குழு தீவிரமாக படமாக்கி வருகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions