ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!

Bookmark and Share

ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!

நீங்களும் ரஜினி பாணியில் அரசியலுக்கு வருவீர்களா என கேட்டதற்கு அப்படியொரு எண்ணம் ஒருபோதும் தனக்கு இருந்ததில்லை என அவர் பதில் கூறியுள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் கம்பீர உடற்கட்டும், வசீகர தோற்றமும் வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட இந்த மரபை உடைத்தெறிக்கும் விதமாக புது நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானவர் தனுஷ்.

ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

மேலும் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என இவருடைய பயணம் தற்போது வேற லெவலில் உள்ளது.இவர் ஹாலிவுட்டில் அறிமுகமான The Extraordinary Journey of Fakir திரைப்படம் தமிழில் பக்கிரி எனும் பெயரில் ஜூன் 21-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தை இந்தியா முழுவதும் சென்று இவர் தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார். இதில் ஒரு நிகழ்ச்சியில் இவரிடம் நீங்களும் ரஜினி பாணியில் அரசியலுக்கு வருவீர்களா என கேட்டதற்கு அப்படியொரு எண்ணம் ஒருபோதும் தனக்கு இருந்ததில்லை என அவர் பதில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
காலா டீஸர் தள்ளி வைப்பு, காரணம் என்ன? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தனுஷ்.!
மாமா ரஜினி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காத தனுஷ்?
அடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை
அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?
மாமனார் ரஜினியை முந்திய மருமகன் தனுஷ்!
விஜய்யிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது – கிளம்பிய சர்ச்சை!
தனுஷ் – சௌந்தர்யா படத்தின் பெயர் இதுவா?
தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினி பட டைட்டீல்களை கைப்பற்றும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions