ரஜினி - லதாவுக்கு இன்று 35வது திருமண நாள்!

Bookmark and Share

ரஜினி - லதாவுக்கு இன்று 35வது திருமண நாள்!

பணக்காரன் படம் வெளியான பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26-ம் தேதி "நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க நல்லா வாழணும்..." -என்று ரஜினி - லதா தம்பதிகளை வாழ்த்துவது ரசிகர்களின் வழக்கமாகிவிட்டது.

திரையுலகம் என்றாலே ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, எப்போது வேண்டுமானாலும் முறிந்து போகும் உறவுகள் என்பதுதான் பலர் மனதிலும் உள்ள பிம்பம். இந்தத் தலைமுறையில் அதைத் தகர்த்த கலைஞர், மனிதர், கணவர் ரஜினி. உலகமே போற்றும் ஒரு மகத்தான கலைஞர், தனது குடும்ப வாழ்க்கையை தன்னைப் பின் தொடர்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

ரஜினியும் லதாவும் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். "மனைவி வந்த நேரம்தான் என் வாழ்க்கை சீரான பாதைக்குத் திரும்பியது... என் வாழ்க்கையின் எந்த முடிவையும் மனைவியைக் கேட்காமல் எடுத்ததில்லை. கணவன் - மனைவி என்றால் சின்னச் சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும்... அதையெல்லாம் ஜாலியாகக் கடந்து வர வேண்டும்," என வெளிப்படையாகச் சொல்பவர் ரஜினி.

தன் கணவர் ரஜினிக்காக எதையும் செய்யத் தயங்காதவர் லதா. அவர் உடல் நலம் குன்றியிருந்தபோது நிலைகுலைந்து விடாமல், ஒரு இரும்புப் பெண்மணியாக நின்று அவர் நலம் பெற துணை நின்றார்.

கணவர் நலம் பெற்று வந்தததும், கடவுளுக்கு தன் முடியை காணிக்கையாக்கினார். ரஜினி என்ற மாபெரும் ஆளுமை சோதனைகளில் சிக்கும்போதும், அவருக்கு கவசமாகத் திகழ்ந்தவர், திகழ்பவர் லதா. 35 ஆண்டுகள் இந்தத் தம்பதிகளின் படத்தைப் பார்க்கும்போதும் சரி, பெயர்களைச் சொல்லும்போதும் சரி.. தம் குடும்பத்தின் ஒரு அங்கமாக நினைத்து மகிழ்ந்து பரவசப்படுகிறார்கள் ஒவ்வொரு ரஜினி ரசிகரும். இந்த உதாரணத் தம்பதிகள் நீண்ட ஆயுளுடனும், குறைவில்லாத மகிழ்ச்சியுடனும் வாழ இயற்கையும் இறைவனும் துணையிருக்கட்டும்.


Post your comment

Related News
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்! லதா ரஜினிகாந்திற்கு கோர்ட் கடும் எச்சரிக்கை
லதா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!
ரஜினி–லதா திருமண நாளையொட்டி ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு உணவு: ரசிகர்கள் ஏற்பாடு
அரசியலுக்கு வந்தால்தான் மக்கள் பணியாற்ற முடியுமா? லதா ரஜினி கேள்வி
ரஜினிகாந் வீட்டின் மாற்றங்கள் : அம்பலப்படுத்திய வாஸ்து நிபுணர்
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய லதா ரஜினிகாந்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions