ரஜினி - ஷங்கர் பட பட்ஜெட் 300 கோடி ?

Bookmark and Share

ரஜினி - ஷங்கர் பட பட்ஜெட் 300 கோடி ?

தமிழ் சினிமாவின் வியாபாரத்தையும், வசூலையும் 100 கோடிகளைத் தாண்டச் செய்தவர் இயக்குனர் ஷங்கர். அவரும், ரஜினிகாந்தும் இணைந்த சிவாஜி, எந்திரன் ஆகிய இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பெரிய சாதனையை படைத்தன.

சிவாஜி படம் சுமார் 60 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், 'எந்திரன்' படம் சுமார் 130 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 290 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஷங்கர், ரஜினிகாந்த் இணையும் எந்திரன் இரண்டாம் பாகம் படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் சுமார் 300 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தவிர நாயகியாக நடிப்பவரும், வில்லனாக நடிப்பவரும் ஹிந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் விரும்புகிறதாம். நாயகியாக நடிப்பதற்கு ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஹீரோயின்களிடம் ஏற்கெனவே பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

சில நாட்களுக்கு முன் வில்லன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால், தயாரிப்பாளர்களோ படத்தை உலகம் முழுவதும் அதிக அளவில் வியாபாரம் செய்ய வேண்டுமென்றால் ஹிந்தி நடிகர் யாராவது இருந்தால்தான் முடியும் என்று சொல்லிவிட்டதாம்.

அதனால், ஷங்கரும் விக்ரமை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்ததை கைவிட்டுவிட்டார் என்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் அனேகமாக முன்னணி ஹிந்தி ஹீரோக்களில் ஒருவர் நடிக்கலாம் என்கிறார்கள்.

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள படத்தின் வசூலை அப்படி இரு மடங்காக அதாவது 600 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். அதை ஷங்கராலும், ரஜினியாலும் செய்ய முடியும் என்று தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்களாம்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions