ரஜினிகாந்த்–கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தில் பதவிகள் வழங்க ஆலோசனை

Bookmark and Share

ரஜினிகாந்த்–கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தில் பதவிகள் வழங்க ஆலோசனை

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றிபெற்றுள்ளது. தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விஷால் அணியை சேர்ந்த கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர். 

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த ராஜேஷ், ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, கோவை சரளா, பிரசன்னா, நந்தா, ரமணா, ஸ்ரீமன், பசுபதி, உதயா, பூச்சிமுருகன், சங்கீதா, சோனியா உள்பட 20 பேர் தேர்வாகியுள்ளார்கள். 

விரைவில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட உள்ள நிலையில், நடிகர் சங்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்க புதிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். 

ரஜினிகாந்தை நடிகர் சங்கத்தின் கவுரவ தலைவராகவும், கமல்ஹாசனை கவுரவ ஆலோசகராகவும் நியமிக்கலாமா?, அல்லது இருவரையும் கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கலாமா? என்று நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions