இருந்தால் ராஜ்கிரணை போல் இருக்க வேண்டும்! - ஏன்...?

Bookmark and Share

இருந்தால் ராஜ்கிரணை போல் இருக்க வேண்டும்! - ஏன்...?

தனக்கு என்று சில கொள்கைகளை வகுத்து அதை கடைபிடித்து வாழ்பவர்கள் சிலர் மட்டுமே, அதில் ராஜ்கிரணும் ஒருவர். நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குநராக வலம் வந்த ராஜ்கிரண் தற்போது குணச்சித்திர வேடங்களில் அசத்தி வருகிறார்.

அதோடு, என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு ராஜ்கிரண் அளித்த பேட்டி, இருந்தால் இவரை போல் இருக்க வேண்டும் என்று சொல்ல வைக்கிறது.

ஏன்...? எதற்காக...? ராஜ்கிரண் என்றாலே கிராமத்து முரட்டு மனிதர் என்று சினிமாவில் அவருக்கு தனி அடையாளம் உண்டு. வேஷ்டியை மடித்து கட்டி அவர் நடந்து வரும் கம்பீரமே திரையில் அவ்வளவு பிரமாண்டமாய் தெரியும்.

அப்படிப்பட்டவரை வேஷ்டி விளம்பரத்தில் நடிக்க சில நிறுவனங்கள் கூப்பிட்டுள்ளனர். அதுவும் 5 லட்சத்தில் நடிக்க கூப்பிட்டு ஒரு கட்டத்தில் ஒரு கோடி வரை சம்பளம் தருவதாக சொன்னார்களாம்.

ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் ராஜ்கிரண். அதற்கு அவர்கள் எதற்காக நடிக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள் அதற்கான காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா..? என்று விளம்பர நிறுவனம் கேட்டுள்ளது. அதற்கு ராஜ்கிரண், வேஷ்டி என்பதே ஏழை விவசாயிகள் உடுத்துவது.

மிஞ்சிப்போனால் ரூ.100 கொடுத்து அதை அவர்கள் வாங்குவார்கள். எனக்கு நீங்கள் இப்படி கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் அந்த செலவையும் ஏழை விவசாயிடமிருந்து தான் வசூலிப்பீர்கள், அதனால் தான் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது சொல்லுங்க இந்த ஒரு விஷயத்திற்காக... இருந்தால் ராஜ்கிரணை போன்று இருக்க வேண்டும் என்று கூறியது சரிதானே...!!

 


Post your comment

Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்
பவர் பாண்டியில் ராஜ்கிரணாக நடிக்கும் தனுஷ்?
தனுஷ் இயக்கும் படம் ஹாலிவுட் காப்பியா? படக்குழு விளக்கம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions