
மஞ்சப்பை, கொம்பன் படங்கள் ராஜ்கிரணின் நடிப்பை பேச வைத்தன. அதோடு, கொம்பன் படத்தில் அவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்றுகூட சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதுபற்றி இதுவரை ராஜ்கிரண் எந்தவித எதிர்பார்ப்பையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது சிவப்பு என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார்.
தாத்தா, அப்பா என அழுத்தமான கதாபாத்திரங்களில் பயணித்து வரும் ராஜ்கிரண், இந்த சிவப்பில் கோனார் என்றொரு கேரக்டரில் நடித்து இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கதைப்படி, இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வரும் அகதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வேடத்தில் நடித்துள்ள ராஜ்கிரண், அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதற்காக போராடுகிறாராம்.
அதோடு, பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்களே அவர்களை பந்தாடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாராம். அந்த வகையில் ராஜ்கிரண் பேசியுள்ள வசனங்கள் செம பஞ்சாக உள்ளதாம்.
இதற்கடுத்து, 1991ல் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் நடித்த என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ராஜ்கிரண் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், மேலும் சில படங்களில் அவரை நடிக்க வைப்பதற்காக இளவட்ட டைரக்டர்கள் சிலர் கதை சொல்லச்சென்றனர்.
ஆனால், அதில் ஒரேயொரு கதையில் மட்டுமே நடிக்க ஓகே சொன்ன ராஜ்கிரண், மற்ற கதைகளில் தான் எதிர்பார்க்கிற அழுத்தம் இல்லை என்று நடிக்க மறுத்து விட்டாராம்.
அதனால் திரும்பிய அந்த டைரக்டர்கள் இப்போது ராஜ்கிரணின் கதாபாத்திரத்தை பெருசுபடுத்தி மீண்டும் அவரிடம் சொல்லி கால்சீட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Post your comment