ராம் சரண் தேஜா தான் ரியல் ஹீரோ...!

Bookmark and Share

ராம் சரண் தேஜா தான் ரியல் ஹீரோ...!

திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் சில நேரங்களில் ஹீரோ ஆவது உண்டு. நேபாளத்தில் ஏற்பட்ட உலகையே உலுக்கிய நிலநடுக்கத்தால், பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்து போய் உள்ளனர்.

உலகம் முழுவதிலும் இருந்து உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் டோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண், நேபாள நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்காக உதவ முன் வந்துள்ளார்.

அவர் அங்கு பாதிப்பு அடைந்த மக்களுக்கு தேவையான மருந்துகளை அனுப்ப இருக்கிறார். ஒரு பிரபல மருத்துவமனையோடு இணைந்து ராம் சரண் அத்தியாவசிய  மருந்து வகைகள், க்ளுகோஸ் பாக்கெட் மற்றும் இதர தேவையான பொருட்களை அனுப்ப இருக்கிறார்.

ஏற்கனவே இமாலய மலைப்பகுதியில் ஷூட்டிங் எடுக்க சென்ற தெலுங்கு படக்குழு ஒன்று நிலநடுக்கத்தில் சிக்கியது. அதில் பிரபல நடனயாசிரியரும், ஹீரோவுமான விஜய் என்பவர் இறந்தது  நினைவிருக்கலாம்.

இப்போது மெகா பவர் ஸ்டார் நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருப்பதால், வரும் நாட்களில் இன்னும் சில பிரபலங்கள் உதவ இருப்பதாக தெரிகிறது.


Post your comment





Related News
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
குடிபோதையில் கார் ஓட்டியதாக வெளியான தகவல் - காயத்ரி ரகுராம் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions