விநாயகர் பற்றி டுவிட்டரில் விமர்சனம்: ராம்கோபால்வர்மாவுக்கு கோர்ட்டு சம்மன்

Bookmark and Share

விநாயகர் பற்றி டுவிட்டரில் விமர்சனம்: ராம்கோபால்வர்மாவுக்கு கோர்ட்டு சம்மன்

இந்தி மற்றும் தெலுங்கு பட டைரக்டர் ராம்கோபால்வர்மா, ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். இவர் 2014–ம் ஆண்டு டுவிட்டரில் விநாயகர் பற்றி விமர்சனம் செய்திருந்தார்.

இது இந்துக்களின் மத நம்பிக்கையை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது மும்பை அந்தேரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ராம்கோபால் வர்மா வருகிற ஜூலை 19–ந் தேதிக்கு முன்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

அவர் ஆஜராக முடியாத பட்சத்தில் அவரது வக்கீல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஐதராபாத்தில் உள்ள ராம்கோபால்வர்மா வீட்டுக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டது.

 


Post your comment





Related News
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions