வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன்: ரமீஸ் ராஜா பேட்டி

Bookmark and Share

வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன்: ரமீஸ் ராஜா பேட்டி

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், டார்லிங்-2. இந்த படத்தை ரைட் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ரமீஸ் ராஜா தயாரித்து கதாநாயகனாக நடித்து இருந்தார். முதல் படத்திலேயே இவர் அண்ணன்-தம்பியாக 2 வேடங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறார்.

அடுத்து இவர், உல்ட்டா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் 2 படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபற்றி ரமீஸ் ராஜா, நிருபரிடம் கூறியதாவது:-

டார்லிங்-2 படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் குறும்படங்களில் நடித்து வந்தேன். அந்த அனுபவத்தில்தான் கதாநாயகனாக நடிக்கும் ஆர்வமும், நம்பிக்கையும் வந்தது. ரைட் மீடியா ஒர்க்ஸ் என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் தொடங்கி, நிறைய பேரிடம் கதை கேட்டேன்.

டைரக்டர் சதீஷ் சந்திரசேகரன் சொன்ன கதை பிடித்து இருந்தது. படத்துக்கு முதலில், ஜின் என்று பெயர் சூட்டியிருந்தோம். வால்பாறை, ஊட்டி மற்றும் கேரளாவில் உள்ள காட்டுப்பகுதிகளில் 3 மாதங்கள் படப்பிடிப்பை நடத்தினோம்.

முதல் படத்திலேயே இரட்டை சகோதரர்களாக 2 வேடங்களில் நடித்தது சவாலான விஷயம்தான். அதற்கு உடன் நடித்தவர்கள் அனைவரும் உதவினார்கள். பேய் படம் என்பதால் பெரும்பகுதி காட்சிகளை இரவு நேரங்களிலேயே படமாக்கினோம்.

படத்தை முடித்து ஞானவேல் ராஜாவுக்கு திரையிட்டு காண்பித்தோம். அவருக்கு படம் பிடித்து இருந்தது. படத்தின் பெயரை, டார்லிங்-2 என்று மாற்றி, அவரே வெளியிட்டார். இந்த படம் உலகம் முழுவதும் 600 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

பிரபல கதாநாயகர்கள் நடித்த படங்கள்தான் 600 அல்லது 700 தியேட்டர்களில் திரையிடப்படும். என் முதல் படமே 600 தியேட்டர்களில் திரையிடப்படும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அதை என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

இப்போது, உல்ட்டா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறேன். ஜனனி அய்யர் கதாநாயகியாக நடிக்கிறார். டேனியல் பாலாஜி வில்லனாக நடிக்கிறார். கருணாகரன், சென்ராயன் இருவரும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள். இது, நகைச்சுவையுடன் கூடிய கடத்தல் கதை. விஜய் பாலாஜி இயக்குகிறார். டார்லிங்-2 படத்துக்குப்பின், மேலும் 2 புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளன.

அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் நிறைந்த மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். தொடர்ந்து இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களிலேயே நடிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு ரமீஸ் ராஜா கூறினார்.


Post your comment





Related News
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!
ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions