கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?

Bookmark and Share

கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?

சித்தார்த் ஜோடியாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்க த்ரிஷா கமிட்டாகியுள்ளார். கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான அந்தாதுன் திரில்லர் படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சித்தார்த் – த்ரிஷா இணைகிறார்கள்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்த படத்தில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த ரோலில் சித்தார்த்தும், ராதிகா ஆப்தே ரோலில் த்ரிஷாவும் நடிக்கிறார்கள்.

இதுபோக படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரம் தபு கதாபாத்திரம்தான். கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் அந்த சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் தமிழில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. 

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் ரம்யா கிருஷ்ணனுக்கு இதெல்லாம் அசால்ட் என்றும் சொல்லப்படுகிறது.  ஏற்கனவே சித்தார்த் – த்ரிஷாவும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்தனர்.

அதன் பின்னர் தமிழில் அரண்மனை 2, தெலுங்கில் நுவோதஸ்தானே நுனோடோன்டனா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions